MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருமணத் தடைகளை நீக்கும் "கூடாரவல்லி" விரதம்: மனதிற்குப் பிடித்த மணாளனைத் தரும்!

திருமணத் தடைகளை நீக்கும் "கூடாரவல்லி" விரதம்: மனதிற்குப் பிடித்த மணாளனைத் தரும்!

மார்கழி மாதத்தில் வைணவத் தலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான உற்சவம் தான் 'கூடாரவல்லி' ஆகும். இறைவனை அடைந்துவிட்ட ஆண்டாள் மார்கழி 27ஆம் தேதி தனது நோன்பை நிறைவு செய்யும் விதமாக கூடாரை வெல்லும் சீர் கோவிந்த பாடலை பாடியுள்ளார். 

3 Min read
Author : Rsiva kumar
Published : Jan 14 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Koodarai Vellum Seer Govinda Meaning
Image Credit : our own

Koodarai Vellum Seer Govinda Meaning

ஒரு வருடத்திற்கு ஒருமுறை மார்கழி பிறக்கிறது இந்த மார்கழி மாதத்தில் 27 ஆம் நாள் அன்று வைஷ்ணவ திருத்தலங்களில் கூடாரவல்லி என்னும் பெயரில் ஒரு உற்சவம் நடைபெறுகிறது. இந்த நாளில் ஆண்டாளை நம் தரிசித்து வந்தால் நாம் நினைத்த மணளனேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது இது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மார்கழி மாதம் முழுவதுமே ஸ்ரீவில்லிப்புத்தூர் திருக்கோயில் விழாக்கோலம் விமர்சியாக இருக்கும். 

அதிலும் மார்கழி 27ம் நாள் பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் வருவார்கள். காரணம் அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். இதைக் கூடாரவல்லி என்று சிறப்பித்துப் போற்றுவர்.தன் திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதைக் குறிப்பிடுகிறாள். அந்த விரதம் கண்ணனின் தரிசனம் வேண்டித் தொடங்கப்பட்டது. அந்த தரிசனம் கிடைத்தபின்பு ஆண்டாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்கிறாள். இதையே ஆண்டாள் தன் திருப்பாவை 27 ல் பாடிப்புகழ்கிறாள்.

25
Benefits of Koodaravalli Fasting
Image Credit : our own

Benefits of Koodaravalli Fasting

திருப்பாவை - 27:

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! 

இந்தப் பாடல் தான் ஆண்டாள் கண்ணனுக்காக பாடப்பட்ட பாடல்.

விளக்கம்: பகைவர்களை வெல்லும் கோவிந்தா, உன்னைப் பறைகொண்டு பாடியதால் நான் பெருமைப்படுகிறேன்.சன்மானங்கள் அளவற்றவை. இந்த நாடு அந்தப் பரிசில்களைக் கண்டு புகழும். இதுநாள்வரை நான் நோன்பில் இருந்தோன். அதனால் கண்களில் மையிட்டவில்லை. மலரிட்டு முடியாமல் நெய்யுண்ணாது பாலுண்ணாது விரத முறைகளை கடைப்பிடித்து வாழ்ந்தோன்.

இன்றோ உன் தரிசனத்தால் எனக்கு விரதம் பூர்த்தியானது. எனவே நான் அழகு படுத்திக்கொள்ளப் போகிறோன். நான்அணிந்துகொள்ள கை அணியான சூடகமும், தோடும், செவியில் அணியும் பூப்போன்ற அணிகலனும் பாதத்தில் அணிந்துகொள்ளும் கொலுசு போன்ற பல்வேறு அணிகலன்களையும் அணிந்துகொள்வோன். 

புதிய ஆடை உடுத்திக்கொள்வோன். அதன்பின் இதுநாள்வரை பாலும் நெய்யும் தவிர்த்து உணவு உண்டுவந்தோன். இன்றோ நான் உன் தரிசனம் கண்ட மகிழ்வில் மகிழ்ந்து உனக்குப் பால்சோறை நிவேதனம் செய்து அதில் அதிகமாய் நெய் ஊற்றி, அவ்வாறு ஊற்றிய நெய் என்‌ முழங்கைகளில் வழிந்து ஓடுமாறு ஆக மன மகிழ்ச்சியோடு இந்த நோன்பை நாங்கள் கொண்டாடுவோன். நீயும் எங்களுடன் இருந்து மகிழ்ச்சி பெருக குளிர்ந்து எமக்கு அருள்வாய்" என்றாள் ஆண்டாள்.

35
Koodarai Vellum Seer Govinda Meaning
Image Credit : our own

Koodarai Vellum Seer Govinda Meaning

ஆண்டாள் கண்ணனை மணம் முடித்தாள்: ஆண்டாள் கண்ணனை மார்கழி மாதம் குளிர்ந்த மாதம் என்று நினைக்காமல் விரதம் இருந்து கண்ணனை கண்டால் அப்போது கண்ணனுக்காக பாடல்கள் பாடி நீண்ட நாள் காதலித்து மணமுடித்தார் ஆண்டாள்.பக்தியின் மூலம் இறைவனை அடையமுடியும் என்பதை இந்த உலகுக்கு விளக்குவதற்காக நிகழ்ந்த அவதாரமே ஆண்டாள் அவதாரம். ஆண்டாள் நாச்சியார் மகிழ்வோடு கூடியிருந்து குளிரும் இந்த நாளில் நாம் அவரிடம் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

45
Koodaravalli Significance in Tamil
Image Credit : Pinterest

Koodaravalli Significance in Tamil

திருமண வரம் அருளும் திருப்பாவை:

திருமண வரம் வேண்டுவோர் தவறவிடக் கூடாத நாள் கூடாரவல்லி. இந்த நாளில், வாய்ப்பிருப்பவர்கள் தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஆண்டாள் சந்நிதியில் நின்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் திருப்பாவை 27 வது பாசுரத்தைப் பாட வேண்டும்.உங்களால் இயன்ற அளவு இந்தப் பாடலை பாட வேண்டும். காரணம், இந்தப் பாடலில் இருக்கும் காதல் அந்த கிருஷ்ணனும் பெரியதாக இருப்பதால் ஒருவரை நாம் எப்படி மனமார வேண்டுகிறோம் என்பதை இதன் காரணம் இன்னைக்கு இவ்வாறு வாழ்க்கை துணை வேண்டும் என்பதும் இதன் பொருளாக அமையும் ஆதலால் பெருமாள் கோயிலுக்குச் சென்று இந்தப் பாடலை பாடியதன் மூலம் நல்ல வாழ்க்கை துணை நமக்கு அமையும் என்பது ஐதீகம்.பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை அமையவும், வாழ்வில் அனைத்துத் தடைகளும் நீங்கவும் இந்த நாளில் வழிபட வேண்டும்.

55
Koodaravalli 2026
Image Credit : our own

Koodaravalli 2026

ஆண்டாள் விரதம் இருந்த நாளில் தனக்கும் கண்ணனுக்கும் திருமணம் நடந்தால் அக்காரவடிசளும், வெண்ணையும் படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன் உடன் ஆண்டாள் மணம் முடித்து ஐக்கியம் ஆகிறாள். ஆனால் கள்ளழகுக்கு அக்காரவடிசளும், வெண்ணையும் சமர் ப்பிடிக்க முடியாமல் போகும். பிறகு பெருமாள் ஆகிய ராமானுஜர் பற்றி கேள்விப்பட்டு ஆண்டாள் வேண்டி கொண்டபடி அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பித்தார். இந்த கதையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மார்கழி 27 ஆம் தேதி அன்று அதாவது கூடாரவல்லி உற்சவம் நடைபெறுகிறது. அதில் கள்ளழகருக்கு நெய் தீபமாக நெய் வலிய வழிய அக்காரவடிசலும், வெண்ணையும் சமர்ப்பிக்கப்படும்.

பரிகாரம்: நீண்ட நாள் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கும் திருமணத்தில் தடை ஏற்படுபவர்களுக்கும் காதலித்தவர்களை மணம் முடிக்க இருப்பவர்களும் ஆண்டாள் திருக்கோயில்களுக்கு சென்று நெய் வெண்ணெய் பச்சரிசி பாசிப்பருப்பு முந்திரி திராட்சை வெள்ளம், போன்றவை கோயிலுக்கு அன்னதானமாக கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கோவில்
ஆன்மீகம்
நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal 2026: பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்.! மறந்தும் இந்த நேரங்களில் பொங்கல் வச்சிடாதீங்க.!
Recommended image2
18 மலைகள்... 18 தேவதைகள்... 18 படிகள்... சபரிமலையின் எண் கணித மர்மம்!
Recommended image3
மதுரையைச் சுற்றியுள்ள பிரம்மாண்டக் கோயில்கள்! ஒரே பயணத்தில் தரிசிக்க முழுமையான ஆன்மீக வழிகாட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved