MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vijayadashami : ஆயுத பூஜை முதல் விஜயதசமி வரை 2026.. தேதி, கிழமை, நவராத்திரி நிறைவு நாள் எப்போது தெரியுமா?

Vijayadashami : ஆயுத பூஜை முதல் விஜயதசமி வரை 2026.. தேதி, கிழமை, நவராத்திரி நிறைவு நாள் எப்போது தெரியுமா?

Ayudha Puja : நவராத்திரி அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்போது? விஜயதசமி எந்தக் கிழமையில் வருகிறது? குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உகந்த நாள், பண்டிகை தேதிகள் மற்றும் வழிபாட்டு முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 10 2026, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நவராத்திரி கொலு
Image Credit : Gemini Ai

நவராத்திரி கொலு

நவராத்திரி

இந்த ஆண்டு சாரதா நவராத்திரி அக்டோபர் 11ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது.

9 நாட்கள் வழிபாட்டின் அமைப்பு

1 முதல் 3 நாட்கள்: வீரம் மற்றும் சக்தியின் வடிவமான பார்வதி தேவி வழிபாடு.

4 முதல் 6 நாட்கள்: செல்வம் மற்றும் அருளின் வடிவமான மகாலட்சுமி வழிபாடு.

7 முதல் 9 நாட்கள்: கல்வி மற்றும் ஞானத்தின் வடிவமான சரஸ்வதி அல்லது  கலைமகள் வழிபாடு

துர்க்காதேவி மகிஷாசுரனை வதம் செய்து உலகைக் காப்பாற்றிய பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது.

நல்ல நேரம்

முகூர்த்த நேரம்: காலை 6:26 மணி முதல் 10:17 மணி வரை

தினசரி பூஜை செய்ய உகந்த நேரங்கள்

  • காலை 6 மணி முதல் 7:30 மணி வரை
  • மதியம் 11:44 மணி முதல் 12:31 மணி வரை
  • இரவு 7 மணி முதல் 09:30 மணி வரை
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆயுத பூஜை நல்ல நேரம்
Image Credit : Gemini Ai

ஆயுத பூஜை நல்ல நேரம்

ஆயுத பூஜை

நாம் செய்யும் தொழில் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் கருவிகளைச் சுத்தம் செய்து, அவற்றுக்கு மரியாதை செலுத்தி தெய்வமாகக் கருதி வழிபடும் சிறப்புமிக்க நாள்தான் ஆயுத பூஜை. ஆயுத பூஜை நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான மகா நவமியன்று கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும்.

தொழிலையும், உழைப்பையும், அவற்றுக்குத் துணையாக இருக்கும் கருவிகளையும் போற்றும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆயுத பூஜை தேதி

அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திங்கட்கிழமை (ஐப்பசி 2) கொண்டாடப்பட உள்ளது.

நவமி திதி: ஆயுத பூஜைக்கான நவமி திதி, அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10:52 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 20 ஆம் தேதி மதியம் 12:50 மணிக்கு நிறைவடைகிறது. இது சுக்ல பட்ச நவமி அல்லது மகா நவமி என அழைக்கப்படுகிறது.

நல்ல நேரம் : திங்கட்கிழமை காலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை மற்றும் காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை

விஜய முஹூர்த்தம்: பிற்பகல் 1:59 மணி முதல் 2:45 மணி வரை விஜய முகூர்த்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகு காலம்: திங்கட்கிழமை காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை ராகு காலம்

இந்த நாளில் பொதுவாக,

  • தொழிற்சாலைகள், கடைகள், பட்டறைகள், அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் கருவிகளைச் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், மலர்கள் படைத்து வழிபடுவது இதன் சிறப்பாகும்.
  • வாழை, தேங்காய், பழங்கள் உள்ளிட்டவற்றைப் படைத்து வழிபடுவார்கள்.
  • தொழில் வளர்ச்சி, தடையற்ற வேலை மற்றும் நலமான வாழ்க்கைக்காக இறைவனை வேண்டுவார்கள்.


ஆயுத பூஜை வரலாற்று புராணக் கதை

மகாபாரதத்தில், பாண்டவர்கள் தங்களது 12 ஆண்டுகால வனவாசத்தையும், ஓராண்டு அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகு, வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் எடுத்து வழிபட்ட நாளுடன் ஆயுத பூஜை தொடர்புபடுத்தப்படுகிறது.

35
சரஸ்வதி பூஜை
Image Credit : Gemini Ai

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை கல்வி, அறிவு, கலை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படும் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நாளில் மாணவர்கள் தங்களது புத்தகங்கள், பேனாக்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள்.

கல்வி மட்டுமின்றி இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் ஈடுபடுபவர்களும் இந்த நாளில் வழிபாடு செய்வது வழக்கம். தமிழகத்தில் ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் ஒரே நாளில் கடைப்பிடிக்கப்படுவது பொதுவான மரபு.

45
விஜயதசமி
Image Credit : Gemini Ai

விஜயதசமி

விஜயதசமி தேதி

விஜயதசமி அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை (ஐப்பசி 3) அன்று வருகிறது. நவராத்திரியின் ஒன்பது இரவுகளுக்குப் பிறகு வரும் நிறைவு நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்றதைக் குறிக்கும் புனித நாளாக இது கருதப்படுகிறது.

விஜயதசமி புராணக் கதை

துர்க்காதேவி மகிஷாசுரனை வதம் செய்து உலகைக் காப்பாற்றிய பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது. அதேபோல், ஸ்ரீ ராமர் இராவணனை வென்று சீதையை மீட்ட நாள் தசரா அல்லது விஜயதசமி எனக் கொண்டாடப்படுகிறது.

தசரா - மனிதனின் 10 தீய குணங்களை (அகங்காரம், கோபம் போன்றவற்றை) அழிக்கும் நாள் என்று பொருள்

சிறப்பு: கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா மிகவும் புகழ்பெற்றது. அதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நல்ல நேரம்

விஜய் முகூர்த்தம்: பிற்பகல் 2:05 மணி முதல் 2:50 மணி வரை

அபராஹ்ன பூஜை நேரம்: பிற்பகல் 1:19 மணி முதல் மாலை 3:36 மணி வரை

• தசமி திதி தொடக்கம்: அக்டோபர் 20 மதியம் 12:50 மணி

• தசமி திதி முடிவு: அக்டோபர் 21 மதியம் 2:11 மணிக்கு

விஜயதசமி நாளில் நாளில் புதிய கலைகள், தொழில்கள் மற்றும் நற்காரியங்களை இந்நாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

இதனால், பல குடும்பத்தினர் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, புதிய கலைகள் அல்லது தொழில்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவது போன்றவற்றைச் செய்வார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு எழுத்தறிவைத் தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வை நடத்துவதும் இந்நாளின் சிறப்புகளில் ஒன்றாகும்.

55
வித்யாரம்பம்
Image Credit : Gemini ai

வித்யாரம்பம்

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எப்போது செய்யலாம்?

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்துப் பயிற்சி அளிக்கும் நிகழ்வு வித்யாரம்பம் எனப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

அரிசியில் விரலால் முதல் எழுத்தை எழுதச் செய்வது அல்லது ஆசிரியரின் உதவியுடன் எழுத்துப் பயிற்சியைத் தொடங்குவது போன்ற மரபுகள் பின்பற்றப்படுகின்றன. கோயில்களிலும் வீடுகளிலும் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப வித்யாரம்பம் நடத்தலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
திருவிழாக்கள்
ஆன்மீகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amavasai Beliefs: அமாவாசை அன்று இந்த 7 பொருட்களை வாங்க வேண்டாமா? முழு விவரம் இதோ!
Recommended image2
Chanakya Niti: இனி பண கஷ்டமே வராது.! கோடீஸ்வரன் பட்டியலில் உங்க பேரு இருக்கும்.! சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 முக்கிய விதிகள்.!
Recommended image3
Navadurga Goddesses: நவராத்திரி 9 நாட்களும் வழிபட வேண்டிய தேவிகள் யார்? சைலபுத்ரி முதல் சித்திதாத்ரி வரை முழு விவரம்!
Related Stories
Recommended image1
Budhaditya Raja Yoga: சூரியன் - புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்..இந்த 4 ராசிகளுக்கு தொழிலில் திடீர் முன்னேற்றம்
Recommended image2
Trigrahi yoga : சூரியன், புதன், சுக்கிரன் ஒரே ராசியில்.. உருவாகும் திரிகிரகி யோகம் – இந்த 5 ராசிகளுக்கு பணமழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved