MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மீன ராசிக்காரர்களே இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்க.. மகிழ்ச்சியும் செழிப்பும் உங்களைத் தேடி வரும்!

மீன ராசிக்காரர்களே இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்க.. மகிழ்ச்சியும் செழிப்பும் உங்களைத் தேடி வரும்!

உங்கள் ராசி மீன ராசியாக இருந்தால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற விரும்பினால், சில பரிகாரங்களை செய்தால் போதும் நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 16 2023, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் சொந்த வித்தியாசமான இயல்புகளைக் கொண்டுள்ளனர். மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை அவர்களின் அதிபதி வியாழன். மீனம் ராசி சுழற்சியில் கடைசி அடையாளம் மற்றும் நீர் உறுப்புகளின் அடையாளமாக கருதப்படுகிறது. மீன ராசிக்காரர்களின் சுபாவம் மிகவும் அன்பாக இருப்பதற்கு இதுவே காரணம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உணர்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த வகையான தடைகளையும் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால் பல சமயங்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கிரார்கள். அவர்களின் மென்மையான இயல்பு காரணமாக, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களை திசை திருப்பும். ஆனால் அவர்கள் சில பரிகாரங்களை செய்தால் போதும். அது அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த உதவுகிறது. எனவே, இங்கு மீன ராசிக்காரர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் சில நடவடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.

37

வியாழன் நாளில் விரதம் இருங்கள்:
உங்கள் ராசியானது மீன ராசியாக இருந்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், வியாழன் அன்று விரதம் இருங்கள். மீன ராசியின் அதிபதி வியாழன். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் வியாழன் அன்று விரதம் இருந்தால், அவருக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும்.
 

47

லட்சுமிநாராயணரை வழிபடவும்:
மீன ராசிக்காரர்கள் லட்சுமிநாராயணரைத் தவறாமல் வழிபட வேண்டும். இது அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது போலவே அவர்கள் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். விஷ்ணுவுடன் சேர்ந்து, அவர்கள் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் செழுமையைப் பெறுகிறார்கள்.
 

57

வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்:
உங்கள் திருமண வாழ்க்கையில் ஏதேனும் தடைகள் இருந்தால், நீங்கள் வெள்ளை பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று தானம் செய்ய வேண்டும். இது தவிர, பெண்கள் லட்சுமி தேவிக்கு அலங்காரம் செய்ய வேண்டும். மறுபுறம், ஆண்கள் பால், தயிர் போன்ற உணவுகளை தானமாக வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அன்னை லட்சுமியை மகிழ்விப்பதன் மூலம், மீன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

67

மீன் பானை வைக்கவும்:
உங்கள் ராசியானது மீன ராசியாக இருந்தால், பணம் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் வீட்டில் மீன் பானையை வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காலையிலும் மாலையிலும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வேலையில் உள்ள தடைகளைப் போக்க உதவுகிறது.

இதையும் படிங்க: தெற்கு திசை பார்த்த வீட்டில் செல்வம் பெருகணுமா? அதற்கு இதை மட்டும் செய்தால் போதும்!!

77

வியாழன் அன்று மஞ்சள் பொருட்கள் தானம் செய்யவும்:
மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பிரச்சனைகளைச் சந்தித்து, அதனால் மகிழ்ச்சியும், நிம்மதியும் குலைந்திருந்தால், வியாழக் கிழமையன்று வாழைப்பழம் போன்ற மஞ்சள் பொருட்களை தானம் செய்யவும். இதுதவிர வெல்லம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை பசுவிற்கு கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் முன்னேற விரும்பினால் வாழைமரம் மற்றும் பீப்பலை வணங்க வேண்டும். அதுபோல்வே, தொடர்ந்து 11 வியாழக் கிழமைகளில் வழிபடுவதும், 11 பரிகாரங்கள் செய்வதும் உங்களுக்கு நல்ல பலனை தரும். குறிப்பாக வழிபாட்டின் போது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம" என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sri Narayana Guru: பெரியாருக்கு முன்பே சாதிக்கு எதிராக நின்ற சாமானியன்.! யார் இந்த ஸ்ரீநாராயண குரு! மணிமண்டபம் கோரிக்கை விடுத்த சீடர்கள்.!
Recommended image2
Horoscope Predictions: ராகு கேது பார்வையால் 5 ராசிகளுக்கு அள்ள அள்ள பணம்.! குவியல் குவியலாக கிடைக்கும் தங்க புதையல்.!
Recommended image3
Raksha Bandhan 2026: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.! ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கட்ட நல்ல நேரம் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved