Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
அஷ்டமி திதி பொதுவாக முகூர்த்தங்களுக்கு தவிர்க்கப்பட்டாலும், அது ஜயா பிரிவைச் சேர்ந்த ஒரு சுப திதியே. முகூர்த்தப் பதவி நூல், கேரள வழக்கம், மற்றும் ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகள் இதன் சிறப்பை உணர்த்துகின்றன.

அஷ்டமியும் சேர்த்துக்கொள்ள தவறில்லை
பண்டை காலமே திதிகள் 15 ஆகவும், அவை நந்தா, பத்ரா, ஜயா, ரிக்தா, பூர்ணா என ஐந்து வகை பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ஜயா பிரிவில் வரும் திரிதியும், திரயோதசியும் முகூர்த்த திதிகளாக பொதுவாக ஏற்கப்படுகின்றன. அப்படியிருக்க, அதே பிரிவில் உள்ள அஷ்டமி ஏன் மறுக்கப்பட வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. முகூர்த்தப் பதவி நூலிலும் “அஷ்டமியும் சேர்த்துக்கொள்ள தவறில்லை” என குறிப்புண்டு. மேலும் கேரளத்தில் “இஷ்டா கிருஷ்ணாஷ்ட மீன்ந்தோ” என்ற செய்யுள் இவர்களிடம் பிரபலமானது. அதன் படி தேய்பிறை அஷ்டமியில் திருமணம் கூட நடத்தப்படுகிறது.
அஷ்டமி பற்றிய கருத்து சமூகம் முழுவதும் ஒரே மாதிரி இல்லை. சில முகூர்த்தப் பட்டியல்களில் அது இடம்பெறாததால், மக்கள் மனதில் அது நல்லதல்ல என்பது போல ஒரு எண்ணம் பரவிவிட்டது. ஆனால் அதே சமயம் ஜன்மாஷ்டமி, அசோகாஷ்டமி போன்ற விரதங்கள் அஷ்டமியின் சிறப்பை தானாகவே விளக்குகின்றன. கொல்கத்தாவின் காளி பூஜை, நவராத்திரி துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜை ஆகியவற்றில் அஷ்டமி முக்கிய நாள் என மதிக்கப்படுகிறது. அம்பாள் பூஜைக்கும் அஷ்டமி சிறப்பு என்பதும் வேத வாக்கே – (சதுர்தச்யாம் அஷ்டம்யாம் வா விசேஷத:).
அருளை அள்ளித்தரும் அஷ்டமி
அஷ்டமியில் தொடங்கும் காரியம் வெற்றி பெறாது என ஒரே திதியை மட்டும் காரணமென சொல்லுவது வழு. முகூர்த்தம் நிர்ணயிக்க திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அம்சங்களும் சேர்ந்து பார்க்கப்பட வேண்டும். ஒன்று மேல் ஒன்றாகப் பொருந்தும் போது தான் நாள் சுபயோகமாகும். எந்த திதிக்கும் தனித்தனியான பலனுண்டு; தோல்வி–வெற்றி என்று திதிகளுக்கு பாகுபாடு இல்லை.
ஆகவே அஷ்டமியை கெட்ட திதி எனத் தள்ளிப் போடுவது சரல்ல. சரியான சேர்க்கைகளில் அது வெற்றியும், அருளும், செழிப்பும் தரும் அற்புத நாள். நம்முடைய நன்முனைப்பு, நம்பிக்கை, விதி சேர்ந்தால் அஷ்டமியும் சுபதிதியாகி வாழ்வில் ஒளி பாராட்டும்.
அருளை அள்ளித்தரும் அஷ்டமி – வீர்ய சக்தி எய்தும் அற்புத தருணம்!

