MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டில் வற்றாமல் பணம் குவிய!! வாஸ்துபடி பீரோவை எந்த 'திசையில்' வைக்கனும் தெரியுமா? 

வீட்டில் வற்றாமல் பணம் குவிய!! வாஸ்துபடி பீரோவை எந்த 'திசையில்' வைக்கனும் தெரியுமா? 

Bero Position Vastu : வீட்டில் பணம் குறையாமல் இருந்து கொண்டே இருக்க பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 26 2024, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bero Position Vastu In Tamil

Bero Position Vastu In Tamil

வாஸ்துபடி வீட்டில் சில விஷயங்களை செய்வது நல்ல முன்னேற்றத்திற்கு உதவும். வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவது தான் வீடுகளில் நேர்மறை ஆற்றலை வைக்க உதவும்.  அது போல உங்களுடைய படுக்கையறையில் பீரோ வைக்கவும் வாஸ்துபடி சில வழிகாட்டல்கள் உள்ளன. அப்படி வைத்தால் செல்வ, செழிப்போடு இருக்கலாம். ஆனால் அதை பின்பற்றாவிட்டால் வீட்டில் பணம் தங்காது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bero Position Vastu In Tamil

Bero Position Vastu In Tamil

பீரோவை வைக்க வேண்டிய திசை

வாஸ்துபடி, பீரோவை படுக்கையறையில் சில திசைகளில் வைப்பது தான் சிறந்தது. தென்மேற்கு திசையில் பீரோவை வைப்பது நல்ல பலன்களை தரும். இந்த திசையில் பீரோவை வைத்தால் பீரோ கதவினை  வடக்கு அல்லது கிழக்கு திசையில் திறக்கலாம்.  இந்த திசை தான் உங்களுக்கு ல் செல்வத்தையும் செழிப்பையும் அள்ளி அள்ளி தருவதாக நம்பப்படுகிறது.

ஏன் தென்மேற்கு திசை? 

தென்மேற்கு மூலையில் வைத்தால் அந்த அறையின் இடத்தை தெளிவுபடுத்தும். வீட்டிலும் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். வற்றாத செல்வமும் அதிகரிக்கும். படுக்கையறையில் பீரோ வைப்பதன் மூலம் நல்ல வேலைக்கான வாய்ப்பு கூட அமையும். அதுமட்டுமின்றி வீட்டின் தென்மேற்கு திசையில் பீரோ வைப்பதன் காரணமாக, அந்த அறைக்கு நடுநிலையான வண்ணங்கள் பூசுவது நல்லது. பீரோ வெள்ளை, பழுப்பு, கிரீம் ஆகிய வண்ணங்களுடன் இருப்பது சிறந்தது. 

35
Bero Position Vastu In Tamil

Bero Position Vastu In Tamil

ஏன் படுக்கையறையில் பீரோ வைக்கிறார்கள்? 

படுக்கையறையில் பீரோ வைப்பது நிதி வளர்ச்சியை தூண்டும். படுக்கையறை தான் வீட்டின்  சக்திவாய்ந்த இடமாகும். இது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரம் அறையின் வடக்கு திசையில் பணம், நகைகளை வைக்க சொல்கிறது. ஏனென்றால் செல்வத்தின் கடவுளான குபேரனின் ஆதார திசை கூட வடக்கு தான். ஆகவே செல்வத்தை சேர்த்து வைப்பதற்கு இத்திசையே ஏற்றது. 

படுக்கையறை சுவரில் இருந்து இடைவெளிவிட்டு பீரோவை வைக்கலாம். சுவரை ஒட்டி வைத்தால்  காற்றின் இயக்கத்திற்கு தடை ஏற்படும். இப்படி வைத்தால் வீட்டில் செல்வம், செழிப்பு இரண்டையும் பெருகும்.  

இதையும் படிங்க: பணத்தை ஈர்க்கும் இருக்கும் மயிலிறகு; எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?!

45
Bero Position Vastu In Tamil

Bero Position Vastu In Tamil

கண்ணாடிகளுக்கு வாஸ்து: 
 
வீட்டைக் கட்டும் போது, வாஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  ​​அதுவே மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  வாஸ்து படி பீரோவின் திசை தென்மேற்கு என்றால், கண்ணாடிகள் வைக்கவும் தனி திசைகள் உண்டு. படுக்கையறையில் வைக்கும் பொருள்களில் கண்ணாடிகள் இல்லாமல் வாங்குவது நல்லது. உங்களுடைய படுக்கையறையில் கண்ணாடி வைத்த பீரோ வைத்தால் அந்த  கண்ணாடி படுக்கைக்கு எதிராக இருக்கக் கூடாது.  கண்ணாடி வைத்த பீரோ வாஸ்து படி மங்களகரமானது கிடையாது. இது எதிர்மறை ஆற்றலை பரப்பும். நிதி வளர்ச்சியையும் பாதிப்பதாக நம்பப்படுகிறது. அதனால் கவனமாக வாங்குங்கள். 

இதையும் படிங்க:  வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!! 

55
Bero Position Vastu In Tamil

Bero Position Vastu In Tamil

பீரோ வைக்கக் கூடாத திசை? 

பெரும்பாலானோர் பணம் மற்றும் விலையுர்ந்த  பொருட்களையும் பணத்தையும் பீரோவில் தான் வைத்திருப்போம்.  எப்போதும் பணத்தை சேமிக்கும் பீரோ லாக்கரில் ஒற்றை கதவு தான் இருக்கவேண்டும். செல்வத்தின் கடவுளான குபேரனுக்கு மரியாதை  செலுத்தும் வகையில் லாக்கர் அல்லது பீரோவை வடக்கு திசையில் வைக்க வேண்டும். மறந்து கூட வடகிழக்கு திசையில் லாக்கர்களையோ பீரோவையோ வைக்க வேண்டாம். இதனால் நிதி இழப்புகள், பண பிரச்சனை வரலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved