MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கஷ்டங்களை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர் கோயில்! பூராடம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய பரிகாரத் தலம்!

கஷ்டங்களை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர் கோயில்! பூராடம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய பரிகாரத் தலம்!

Akasapureeswarar Temple remedy For pooradam nakshatra: பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடி செல்ல வேண்டிய வழிபாட்டு தலம். இங்கு தான் கடுவெளிச்சித்தர் சிவதரிசனம் பெற்றார் என கூறப்படுகிறது. 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 01 2026, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆகாசபுரீஸ்வரர் கோயில்
Image Credit : blogger.googleusercontent.com

ஆகாசபுரீஸ்வரர் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளியில் அமைந்துள்ள ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், பூராட நட்சத்திரத்திற்கு உரிய சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலாகும். கடுவெளிச் சித்தர் அவதரித்த இத்தலத்தில், 2000-3000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஆகாசபுரீஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அருள்பாலிக்கின்றனர். சித்தர்கள் வழிபடும் விதமாகவும் சொல்லப்படுகிறது.

25
Akasapureeswarar Temple
Image Credit : blogger.googleusercontent.com

Akasapureeswarar Temple

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் தான் இந்த கடுவெளி கோயில். சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை தான் மட்டுமின்றி, மக்களும் உணர்ந்து கொண்டு உலகமே சிறப்பாக இருக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் மக்களுக்கு அதை உபதேசித்தார். இதனால், இவருக்கு கடுவெளிச்சித்தர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு தங்கியிருந்த சித்தர், சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்கள் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். தலமும் சித்தர் பெயரால் கடுவெளி என்றழைக்கப்பட்டது.

35
Pooradam Nakshatra Temple
Image Credit : blogger.googleusercontent.com

Pooradam Nakshatra Temple

பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் இங்கு பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். இங்குள்ள அம்பிகை, மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால் மங்களாம்பிகை என்று பெயர். ஆகாச வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, மாலை அணிவித்து, கேசரி நைவேத்யம் செய்து வணங்கினால் வாழ்வு சிறக்கும். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

45
Dhanusu Rasi Pariharam Temple
Image Credit : blogger.googleusercontent.com

Dhanusu Rasi Pariharam Temple

சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, கடுவெளிச்சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டாராம். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.

55
பலன்கள்: Temple for Pooradam Nakshatra
Image Credit : blogger.googleusercontent.com

பலன்கள்: Temple for Pooradam Nakshatra

ஆகாயம் தொடர்பான பஞ்சபூதத் தலம், வாஸ்து தோஷம் நீக்கும் தலம் மற்றும் சித்தர்கள் வழிபாடு செய்யும் தலமாகவும் இது போற்றப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
சிவராத்திரிக்கும் திருவண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? அடிமுடி காண முடியாத அண்ணாமலையார் கதை!
Recommended image2
வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் – திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர்!
Recommended image3
தீராத கஷ்டங்களை தீர்க்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்! நினைத்தாலே முக்தி தரும் தலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved