- Home
- Spiritual
- நம்பிக்கையோடு சென்றால் நலம் தரும் முருகன்! 6 வார செவ்வாய் வழிபாட்டில் கூடி வரும் திருமண பாக்கியம்!
நம்பிக்கையோடு சென்றால் நலம் தரும் முருகன்! 6 வார செவ்வாய் வழிபாட்டில் கூடி வரும் திருமண பாக்கியம்!
6 Tuesdays Nadupalani Dhandayuthapani Temple Worship ; திருமணத் தடை உள்ளவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் முருகப்பெருமானின் 6 வார செவ்வாய்க்கிழமை வழிபாடு ஒரு அருமருந்தாகும்

Best Murugan Temples near Chennai for Weekend, Murugan Temple Nadupalani
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா பெருங் கரணை என்னும் கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இந்த நாடு பழனி கோயில் ஒரு மலைக்கோயில் ஆகும். அடிவாரத்தில் 45 அடி உயரத்தில் முருகன் வேல் புடித்து மயில் துணை கொண்டு நிற்று வரும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். முருகனின் பொற்பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக்கு அந்த அழகு சமர்ப்பணம்.
Nadupalani Dhandayuthapani Temple
மழையில் ஏறுவதற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்கு 128 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். 120 படிக்கட்டுகளை ஏறி சென்ற பிறகு முருகன் மயில் தோகை விரித்திருக்க பாம்புகள் சூழ்ந்து இருக்க மரகத கற்களால் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வள்ளி மற்றும் தெய்வானை இருபுறமும் அமர்ந்துள்ளனர் அதை பார்க்கும் அழகு கண் போதவில்லை என்றே கூறலாம். இந்த கோயிலின் சிறப்பு மரகத கல் என்று கூறப்படுகிறது மனதிற்கு சந்தோசத்தையும் மன நிம்மதியும் அளிக்கிறது.
கோயிலின் மற்ற சிறப்பு:
மலேசியாவில் இருக்கும் முருகன் சிலை போலவே , 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான இருந்த முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.
சற்று மேலே இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.அவரைகடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு பக்கமாக காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் அமைந்துள்ளது சுற்றி நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு பக்கமாக காட்சி தருகிறார்.
Nadupalani Temple Timings and Pooja details
இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அதற்கு பிறகு அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன. நடு பழனி திருக்கோவிலுக்கு சென்றால் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் கூறப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.