MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vastu tips: மறந்தும் கூட இந்த பொருட்களை சமையல் அறையில் வைக்காதீங்க..!!!

Vastu tips: மறந்தும் கூட இந்த பொருட்களை சமையல் அறையில் வைக்காதீங்க..!!!

வாஸ்து சாஸ்திரம் படி,  சமையலறையில் சில பொருட்களை வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பெருகும் என்று கூறப்படுகிறது. எனவே அவை என்னென்ன பொருட்கள் என்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : May 23 2023, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம் வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான ஒரு இடமாகும். மேலும் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய தன்மையை கொண்டிருக்கும். அந்த வகையில் சமையலறையில் இருக்கக்கூடிய 4 பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடுவதால் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

25

துடைப்பம்:

பெரும்பாலானோர் வீட்டின் சமையல் அறையில் துடைப்பம் இருக்கும். மகாலட்சுமியின் அம்சம் துடைப்பம்  என்றாலும், அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்கவும். குறிப்பாக பூஜை அறை, சமையலறை மற்றும் வீட்டின் நிலை வாசலில் கொண்டு போய் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி தேவி கோபமடைவால் என்பது ஐதீகம். எனவே, இனி துடைப்பத்தை சமையல் அறையில் வைக்காதீர். 
 

35

உடைந்த கண்ணாடி பொருட்கள்:

சமையலறையில் உடைந்த கண்ணாடி பொருட்கள் இருக்கக் கூடாது. எவ்விதமான உடைந்த கண்ணாடி சார்ந்த பொருட்களாக இருந்தாலும் சரி,  அது உடைந்து போய்விட்டால் அதனை  ஒருபோதும் பயன்படுத்தாதீர். இது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல்களை கொண்டு வரும்.


இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கோவில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை; அதிகாரிகள் விசாரணை

45

குப்பை தொட்டி:

குப்பைத் தொட்டியை ஒருபோதும் சமையல் அறையில் வைக்க கூடாது. குறிப்பாக சமையல் கழிவுகளை உடனே அப்புறப்படுத்துவது நல்லது. ஏனெனில், நாள் முழுவதும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும். எனவே இந்த தவறை தெரியாமலும்  கூட செய்யாதீர்.

55
iron nail

iron nail

துருப்பிடித்த இரும்பு பொருட்கள்:

சமையல் அறையில் துருப்பிடித்த இரும்பு பொருட்களை வைக்க கூடாது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும். குறிப்பாக இது சனி பகவானின் உலோகம். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். எனவே இவற்றை ஒருபோதும் சமையல் அறையில் வைக்காதீர்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சித்தர்கள் மற்றும் ஜீவ சமாதி வழிபாடு பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
Recommended image2
Chitragupta puja சித்ரா பௌர்ணமி : பாவங்களை போக்கும் சித்ரகுப்தர் வழிபாட்டு முறைகள்
Recommended image3
fasting science விரதம்: பட்டினி கிடப்பது ஆன்மீகமா அல்லது அறிவியலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved