MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • தனுஷின் ரியல் ‘வாத்தி’ செல்வராகவனுக்கு வெற்றி கிடைத்ததா? - பகாசூரன் படத்தின் விமர்சனம்

தனுஷின் ரியல் ‘வாத்தி’ செல்வராகவனுக்கு வெற்றி கிடைத்ததா? - பகாசூரன் படத்தின் விமர்சனம்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், கூல் சுரேஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பகாசூரன் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 17 2023, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திரெளபதி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. அவர் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதையுடன் களமிறங்கும் இயக்குனர் மோகன் ஜி. இந்த படத்திலும் செல்போனால் வரும் பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார் மோகன் ஜி. தனுஷின் வாத்தி படத்துக்கு போட்டியாக அவரின் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

இதையும் படிக்க... அஜித் கைவிட்டாலும்... விக்னேஷ் சிவனை கைவிடாத ‘விஜய்’ நடிகர்..! விக்கியின் அடுத்த பட ஹீரோ இவரா?

36

பகாசூரன் படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “பகாசூரன் படத்தில் செல்வராகவனின் நடிப்பு வெறித்தனமாக இருந்தது. நட்டி நட்ராஜும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசை தெறிக்க விடுது. மோகன் ஜி-யின் மேக்கிங்கும், கதையும் வேறலெவல்.  ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.

46

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “உண்மையில் ஒரு சிறந்த படம். ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மகள்கள் உள்ளவர்களுக்கு.ஒரு அசிங்கமான வசனம் கூட இல்லாத படம். மற்ற இயக்குனர்கள் இவரை போலவே படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என பாராட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள்... தனுஷ் ‘வாத்தி’யாக பாஸ் ஆனாரா? பெயில் ஆனாரா? - வாத்தி படத்தின் விமர்சனம் இதோ

56

இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : “பகாசூரன் முதல் பாதி அருமையாகவும், இரண்டாம் பாதி நன்றாகவும் இருந்தது. செல்வராகவன் நடிப்பில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். நட்டி நட்ராஜும் வழக்கம்போல அருமையாக நடித்திருக்கிறார். திரைக்கதையை திறம்பட கையாண்டு சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியுள்ள இயக்குனர் மோகன் ஜிக்கு பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

66

படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “பகாசூரன் முற்றிலும் ஈர்க்கும் படமாகவே உள்ளது. மோகன் ஜி-யின் முந்தைய படங்களில் இருந்து இது வித்தியாசமாக உள்ளது. இந்த சமூகத்திற்கு தேவையான, அழுத்தமான மெசேஜும் படத்தின் இறுதியில் உள்ளது. செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜின் நடிப்பு அருமை” என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது பகாசூரன் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... வாத்தி படத்தை வரவேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Athiradi : சரவெடியாக உள்ளதா பேசில் ஜோசப்பின் ‘அதிரடி’ திரைப்படம்? விமர்சனம் இதோ
Recommended image2
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Karuppu Review : கருப்பு காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முதல் பாதி விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved