MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • பிக் பாஸ் தர்ஷன் நடித்த சரண்டர்... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

பிக் பாஸ் தர்ஷன் நடித்த சரண்டர்... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

கெளதமன் கணபதி இயக்கத்தில் பிக் பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள சரண்டர் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 01 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Surrender Twitter Review
Image Credit : X/TharshanShant

Surrender Twitter Review

கெளதமன் கணபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன், மலையாள நடிகர் லால், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் தான் இந்த சரண்டர். இப்படத்திற்கு விகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை வி.ஆர்.வி குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் தர்ஷன். இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

24
சரண்டர் ட்விட்டர் விமர்சனம்
Image Credit : X/TharshanShant

சரண்டர் ட்விட்டர் விமர்சனம்

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு முன் தன் கைத் துப்பாக்கியை பிரபல நடிகர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. பரபரப்பாகிறது அந்த காவல் நிலையம். போலீஸ் அடுத்து என்ன செய்கிறது என்பதை பரபரப்பாக சொல்வது தான் சரண்டர் பட கதை. நடிகர்கள் தர்ஷன், லால், கவுஷிக் தவிர மற்றவர்கள் பெருசா அறிமுகம் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் அதை யோசிக்கவிடாமல் நேர்த்தியாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் கெளதமன் கணபதி என பாராட்டி உள்ளார்.

Related Articles

Related image1
அடுத்த KGF-ஆ? இல்ல அடுத்த தக் லைஃப்-ஆ? கிங்டம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Related image2
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘ஹவுஸ்மேட்ஸ்’ காமெடியில் கலக்கியதா? சொதப்பியதா? விமர்சனம் இதோ
34
சரண்டர் படம் எப்படி உள்ளது?
Image Credit : X/TharshanShant

சரண்டர் படம் எப்படி உள்ளது?

படம் பார்த்த இயக்குனர் அறிவழகன் தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், சரண்டர் படம் கொடுத்ததற்காக இயக்குனர் கெளதமன் கணபதியை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தமிழில் உங்கள் முதல் படமே யதார்த்தத்துடன் கூடிய ஒரு தீவிரமான திரில்லர் கதையாக உள்ளது. லால் சார், சரியான நடிகர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய பாத்திரம். தர்ஷன் எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விகாஸின் இசை, மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, மனோஜின் ஆர்ட், ரேணுவின் எடிட், சந்தோஷின் ஆக்‌ஷன் என அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

44
சரண்டர் விமர்சனம்
Image Credit : X/TharshanShant

சரண்டர் விமர்சனம்

இந்த வாரத்திற்கான முதல் பரிந்துரை நடிகர் தர்ஷனின் சரண்டர். இறுக்கமான கதைக்களம் மற்றும் சிறந்த நடிகர்களுடன் கூடிய ஒரு அழகான, பரபரப்பான கிரைம் திரில்லர் படம் இது. தர்ஷன் ஒரு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக மிகச் சரியாக நடித்துள்ளார். தமிழ் சினிமா இன்னொரு நல்ல இளம் ஹீரோவைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. அதேபோல் இயக்குனர் கெளதமன் கணபதியும் ஈர்த்துள்ளார். சுஜித் சங்கர் இதில் வில்லனாக மற்றொரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சரண்டர் என்பது நீங்கள் ஒரு டிக்கெட்டுக்கு செலவிடும் பணத்திற்கு நிச்சயமாக மதிப்புள்ள ஒரு படம் என குறிப்பிட்டுள்ளார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் சினிமா
விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
விமலின் கிராமத்து விருந்து டேஸ்டா? வேஸ்டா? வடம் விமர்சனம் இதோ
Recommended image2
தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Recommended image3
சரத்குமாரின் ‘ஆழி’ தாய் கிழவியை விட சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
அடுத்த KGF-ஆ? இல்ல அடுத்த தக் லைஃப்-ஆ? கிங்டம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Recommended image2
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘ஹவுஸ்மேட்ஸ்’ காமெடியில் கலக்கியதா? சொதப்பியதா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved