MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Politics
  • விஜய்க்கு முதல்வர் பதவி?! தாவெகவுடன் கூட்டணிக்கு கொக்கி போடும் பாஜக.! ஈபிஎஸ்-ஐ சரிகட்டி பிளான் "பி" திட்டத்தை அமல்படுத்தும் அமித்ஷா.!

விஜய்க்கு முதல்வர் பதவி?! தாவெகவுடன் கூட்டணிக்கு கொக்கி போடும் பாஜக.! ஈபிஎஸ்-ஐ சரிகட்டி பிளான் "பி" திட்டத்தை அமல்படுத்தும் அமித்ஷா.!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, அமித்ஷா ஒரு 'பிளான் பி' வகுத்துள்ளார் என கூறப்படுகிறது. அது விஜய்க்கு முதல்வர் பதவி என்பதை முன்நிறுத்துவதால் மீண்டும் தழிழக அரசியல் பரபரப்படைந்துள்ளது. 

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 17 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
அரசியல் வட்டாரங்களில் பெரும் புயல்
Image Credit : Asianet News

அரசியல் வட்டாரங்களில் பெரும் புயல்

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, டெல்லி மேலிடத்தின் பார்வையில் தமிழகம் இப்போது ஒரு முக்கிய போர்க்களமாக மாறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகிய இருவரையும் மையப்படுத்தி அமித்ஷா வகுத்துள்ள "பிளான் பி" அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த கணக்குகள் பொருந்தி போனால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஈபிஎஸ்-ஐ சரிகட்டும் 'சாம, பேத, தான' தண்டம்!
Image Credit : x

ஈபிஎஸ்-ஐ சரிகட்டும் 'சாம, பேத, தான' தண்டம்!

கடந்த தேர்தல்களில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்த இபிஎஸ், தற்போது தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க விரும்புவதோடு, "பாஜக-வுடன் இனி கூட்டணியே இல்லை" எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். ஆனால், அமித்ஷாவின் கணக்கோ வேறு விதமாக உள்ளது.

பணிந்து வர வைக்கும் அழுத்தம்

இபிஎஸ்-ஐ முழுமையாகப் புறக்கணிப்பதை விட, அவரைச் சரிகட்டி தனது கூட்டணிக்குள் கொண்டு வருவதே பாஜக-வின் முதல் இலக்கு. இதற்காக பழைய வழக்குகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அவரைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்க டெல்லி தீவிரமாக முயன்று வருகிறது.

Related Articles

Related image1
வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?
Related image2
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!
37
இரண்டாம் இடத்திற்குத் தள்ளும் வியூகம்
Image Credit : our own

இரண்டாம் இடத்திற்குத் தள்ளும் வியூகம்

இபிஎஸ் தான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், அவரைச் சரிகட்டி “அதிகாரப் பகிர்வு” முறைக்குச் சம்மதிக்க வைக்க அமித்ஷா தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. அதாவது, ஒருவேளை ஆட்சி அமைந்தால் இரண்டரை ஆண்டுகள் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஃபார்முலாவை முன்வைக்கிறார்கள். விஜய் கேட்கும் முதல்வர் பதவியை அவருக்கே வழங்கவும் முடிவாியுள்ளதாக கூறப்படுகிறது.

47
தவெக-வுடன் கூட்டணிக்கு கொக்கி போடும் பாஜக
Image Credit : our own

தவெக-வுடன் கூட்டணிக்கு கொக்கி போடும் பாஜக

இபிஎஸ்-க்கு இணையாக பாஜக தற்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தான்.

புதிய வாக்கு வங்கி

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு சக்தியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த அமித்ஷா, விஜய்யின் செல்வாக்கைத் தனது பக்கம் திருப்ப 'கொக்கி' போட்டு வருகிறார்.

விஜய்க்கு முதல்வர் பதவி - ஆசை வார்த்தை

இபிஎஸ்-ஐ சரிகட்ட முடியாத பட்சத்தில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பாஜக தயாராகி வருகிறது என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. "நீங்கள் முதல்வர் வேட்பாளராக நில்லுங்கள், நாங்கள் பின்னணியிலிருந்து ஆதரவு தருகிறோம்" என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

57
மாற்றி மாற்றி திட்டம் போடும் பாஜக
Image Credit : instagram

மாற்றி மாற்றி திட்டம் போடும் பாஜக

அமித்ஷாவின் இந்தத் திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றது. ஒன்று, இபிஎஸ்-ஐ பயமுறுத்தி பணிய வைப்பது. இரண்டு, விஜய் போன்ற ஒரு இளைஞர் செல்வாக்கு மிக்க தலைவரைத் தங்களது பக்கம் இழுப்பதன் மூலம் திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது.

67
அரசியல் நோக்கர்களின் கணிப்பு
Image Credit : instagram

அரசியல் நோக்கர்களின் கணிப்பு

இபிஎஸ்-ஐ சரிகட்டினால் மட்டுமே அதிமுக - பாஜக -  தவெக கூட்டணி சாத்தியம். அவர் மசியவில்லை என்றால், விஜய்யை மையமாக வைத்து பாஜக தனது புதிய ஆட்டத்தைத் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் 'கிங்' ஆகப் போவது யார்? அல்லது 'கிங் மேக்கர்' ஆகப் போவது யார்? என்பது அமித்ஷாவின் இந்த நகர்வுகளுக்கு இபிஎஸ் மற்றும் விஜய் கொடுக்கும் பதிலடியில்தான் இருக்கிறது.

77
ஒரு மெகா கூட்டணியா? அல்லது மேட்ச் பிக்சிங்கா?
Image Credit : instagram

ஒரு மெகா கூட்டணியா? அல்லது மேட்ச் பிக்சிங்கா?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'சதுரங்க ஆட்டத்தை' அமித்ஷா தற்போது ஆடத் தொடங்கியுள்ளார். ஒருபுறம் அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமியை (EPS) வளைத்து, அதிமுகவின் வாக்கு வங்கியைத் தக்கவைக்க முயல்வதும்; மறுபுறம், இளைய தலைமுறையின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யை முதல்வர் பதவி என்ற கவர்ச்சிகரமான 'ஆஃபர்' மூலம் தன் பக்கம் ஈர்க்க முயல்வதும் டெல்லியின் இரட்டை வியூகத்தைக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த 'பிளான் பி' வெற்றி பெறுமா என்பது இரண்டு முக்கிய கேள்விகளைச் சார்ந்துள்ளது:

இபிஎஸ் பணியவாரா? - தனது ஒற்றைத் தலைமை பிம்பத்தை விட்டுக்கொடுத்து, பாஜகவின் நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சம்மதிப்பாரா? அல்லது "தனித்துப் போட்டி" என்ற தனது முடிவில் உறுதியாக நின்று டெல்லிக்கு அதிர்ச்சி கொடுப்பாரா?

விஜய்யின் நிலைப்பாடு என்ன? - ஆரம்பத்திலேயே ஒரு தேசியக் கட்சியுடன் கைகோர்ப்பது தனது 'திராவிட-தமிழ் தேசிய' அரசியலுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா? அல்லது முதல்வர் நாற்காலியை நோக்கி குறுக்கு வழியில் பயணிக்க விஜய் சம்மதிப்பாரா?

அமித்ஷாவின் இந்த 'கொக்கி' போடும் அரசியல், தமிழகத்தில் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒன்றிணைக்கும் ஒரு "மெகா கூட்டணியை" உருவாக்குமா அல்லது கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தி ஆளுங்கட்சிக்குச் சாதகமாக முடியுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில், 2026 தேர்தல் களம் என்பது வெறும் வாக்குப்பதிவு அல்ல; அது அமித்ஷாவின் சாணக்கியத்தனத்திற்கும், இபிஎஸ்-விஜய் ஆகியோரின் அரசியல் உறுதிக்கும் இடையிலான ஒரு பெரும் பலப்பரிட்சை!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விஜய் (நடிகர்)
அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக கூட்டணி
டிவி.கே. விஜய்
பிஜேபி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?
Recommended image2
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved