MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தவெக மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் வைத்த ஆப்பு..! விஜய்க்கு கைகொடுத்த கேரளா..!

தவெக மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் வைத்த ஆப்பு..! விஜய்க்கு கைகொடுத்த கேரளா..!

திமுக நேரடியாக தவெகவை எதிர்க்காது என்றாலும், இது அவர்களின் அரசியல் உத்தியாக இருக்கலாம். திமுக அரசு, பாஜக மாநாடுகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை, ஆனால் தவெக மாநாட்டிற்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

2 Min read
Author : Thiraviya raj
Published : Aug 20 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தவெக மாநாட்டிற்கு தடங்கல்
Image Credit : Asianet News

தவெக மாநாட்டிற்கு தடங்கல்

ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ள தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விஜய் மதுரைக்கு இரு தினங்களுக்கு முன்பாகவே சென்று விட்டார்.

இந்நிலையில், மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு ஆளும் கட்சியான திமுகவால் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுவதாக தவெகவினர் குற்றச்சாட்டி வருகின்றனர். மாநாட்டிற்கு மக்களை அழைத்து வருவதற்கு பயண வாகனங்களை வாடகைக்கு எடுக்க மாவட்ட நிர்வாகிகள் மிரட்டப்படுவதாகவும், வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திமுகவை குற்றம்சாட்டும் தவெக
Image Credit : X

திமுகவை குற்றம்சாட்டும் தவெக

மாநாட்டு இடத்திற்கு செல்லும் முக்கிய வழியில் திடீரென பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், இது மாநாட்டிற்கு கூட்டம் கூடுவதை தடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநாட்டிற்கு முன்பு மழை காரணமாக இடம் தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இது ஆளும் கட்சியான திமுக ஏற்படுத்தும் தடைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திமுக நேரடியாக தவெகவை எதிர்க்காது என்றும், இது அவர்களின் அரசியல் உத்தியாக இருக்கலாம் என்றும் தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆளும் திமுக அரசு, பாஜக மாநாடுகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை, ஆனால் தவெக மாநாட்டிற்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Articles

Related image1
முதல்வர்கள்- அமைச்சர்களை நீக்க புதிய சட்டம்- அடித்து இறங்கும் பாஜக..! அலறும் எதிர்க்கட்சிகள்..!
33
நாற்காலிக்கு வந்த சிக்கல்
Image Credit : Asianet News

நாற்காலிக்கு வந்த சிக்கல்

மதுரை மாநாட்டிற்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி காரணமாக பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தெரிவித்ததால் மாநாடு தேதி ஆகஸ்ட் 25-லிருந்து ஆகஸ்ட் 21-ஆக மாற்றப்பட்டது.

இந்நிலையில், தவெக மாநாட்டில் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டடு 5 நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் 4 ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் தர முடியாது என்று கூறியதால் கேரளாவில் இருந்து நாற்காலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் ஆளும்கட்சியினர் கொடுத்த நெருக்கடியாக இருக்கலாம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாரபத்தியில் நடைபெறும் 2வது மாநாட்டிற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார், ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தற்போது மாநாடு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. பிரமாண்டமான மேடை அமைப்புகள், அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் தலையீடு குறித்து உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், தவெக ஆதரவாளர்கள் இந்த தடங்கல்களை திமுகவின் மறைமுக எதிர்ப்பாக பார்க்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லலை.

அக்டோபர் 2024-ல் விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியதாகவும், ஆளும் கட்சியின் செல்வாக்கால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் முன்பு குற்றம்சாட்டப்பட்டது.

About the Author

TR
Thiraviya raj
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Recommended image2
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?
Recommended image3
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Related Stories
Recommended image1
முதல்வர்கள்- அமைச்சர்களை நீக்க புதிய சட்டம்- அடித்து இறங்கும் பாஜக..! அலறும் எதிர்க்கட்சிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved