MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • DMK Issue: பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மெண்டு..? கடுப்பான மு.க.ஸ்டாலின்..! பறிபோகும் 15 திமுக மா.செ பதவி..!

DMK Issue: பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மெண்டு..? கடுப்பான மு.க.ஸ்டாலின்..! பறிபோகும் 15 திமுக மா.செ பதவி..!

இந்த முறை விரைவாகவே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்ற முடிவெடுத்து இருக்கிறது திமுக தலைமை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இப்போது முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

1 Min read
Author : Thiraviya raj
Published : Sep 25 2025, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கி உள்ளது திமுக. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி தமிழகத்தில் 40 இடங்களில் வெற்றிபெற்றது. இது திமுக மீதான ஆதரவைப் பலப்படுத்தும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

23
Image Credit : X/DMK

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து 133 தொகுதிகளையும், கூட்டணியுடன் 159 தொகுதிகளையும் வென்றபோது போல், இம்முறை 200+ தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனாலும், புதிதாக வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, பாஜக கூட்டணி போன்றவை திமுகவுக்கு சவால்களாக மாறியுள்ளன.

திமுகவில் இப்போது மொத்தம் 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களது செயல்பாட்டை கட்சி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களை அடையாளம் கண்டு வருகிறது திமுக தலைமை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் மூலமாக நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சில மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின் என கூறப்படுகிறது.

Related Articles

Related image1
அம்பலப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்..! இந்தியாவே எங்களுக்கு முக்கியம்..! டிரம்பை லெஃப்டில் கடாசிய அமெரிக்க அமைச்சர்..!
33
Image Credit : Asianet News

இதன் அடுத்த கட்டமாக இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மாவட்ட வாரியாக சென்று திமுக நிர்வாகிகளையும், சார்பு அணியினரையும் சந்தித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளை பற்றிய ரிப்போர்ட்டை கையில் வைத்திருக்கிறார். மொத்தத்தில் பத்து முதல் 15 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோவது உறுதி என்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்த முறை விரைவாகவே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்ற முடிவெடுத்து இருக்கிறது திமுக தலைமை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இப்போது முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Recommended image1
டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
Recommended image2
ஸ்டாலினுக்கு 13 மார்க். பெற்றோரும், தாய்மார்களும் மன்னிக்கக்கூடாது…! அன்புமணி ஆவேசம்
Recommended image3
அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
Related Stories
Recommended image1
அம்பலப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்..! இந்தியாவே எங்களுக்கு முக்கியம்..! டிரம்பை லெஃப்டில் கடாசிய அமெரிக்க அமைச்சர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved