MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • உற்சாகத்தில் உ.பீஸ்..! களத்திற்கு வரும் 4ம் தலைமுறை-இன்பநிதி..! உதயநிதி போட்ட ட்விட்..!

உற்சாகத்தில் உ.பீஸ்..! களத்திற்கு வரும் 4ம் தலைமுறை-இன்பநிதி..! உதயநிதி போட்ட ட்விட்..!

மகன் இன்பதிநியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எந்த கேப்சனும் இன்றி பதிவிட்டுள்ளார். அதில் தந்தையும் மகனும், வெளிர் பச்சைநிற ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் பல்வேறு வியூகங்களை கிளப்பி இருக்கிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Aug 28 2025, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

கருணாநிதி குடும்பத்தினரின் வாரிசு அரசியலில் 4ம் தலைமுறையாக இன்பநிதி களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அரசியலின் மூன்றாம் வாரிசான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 4ம் வாரிசின் புகைப்படத்தை பகிர்த்து பரபரப்பை கிளப்பியுள்ளார். கருணாநிதி, தனது அரசியல் வாழ்க்கையில் தன் குடும்ப உறுப்பினர்களை கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளுக்கு கொண்டுவந்துள்ளார். கருணாநிதி முதலில் தனது மகன் மு.க.முத்துவை அரசியல் வாரிசாக உயர்த்த முயற்சித்தார். அவரை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் அறிமுகப்படுத்தி, பின்னர் அரசியல் மேடைகளில் பிரச்சார பாடகராக பயன்படுத்தினார். ஆனால், மு.க.முத்து அரசியலில் வெற்றிபெறவில்லை.

கருணாநிதி தனது மற்றொரு மகன் மு.க. ஸ்டாலினை படிப்படியாக அரசியலுக்கு தயார்படுத்தினார். ஸ்டாலின் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என பல பதவிகளை வகித்து, இறுதியில் திமுகவின் தலைவராகவும் தமிழக, முதலமைச்சராகவும் உயர்ந்தார். ஆனால், கருணாநிதி தனது வாழ்நாள் வரை முழு அதிகாரத்தையும் ஸ்டாலினிடம் ஒப்படைக்காமல் தக்கவைத்திருந்தார். இதனால் அப்பா-மகனுக்கு இடையே உள்மோதல்கள் ஏற்பட்டதாகக் கூட தகவல்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : our own

ஸ்டாலினின் மகனும், கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், சினிமா தயாரிப்பாளர், நடிகராக இருந்து, பின்னர் திமுக இளைஞரணி தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும், பின்னர் துணை முதலமைச்சராகவும் உயர்ந்தார். அரசியலில் உதயநிதியின் கிடுகிடு வளர்ச்சிக்கு மத்தியில் அவரது மகன் இன்பநிதியை விரைவில் அரசியல் களத்தில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் தொடக்ககால கொள்கைகளான பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதியை முன்னிறுத்திய அண்ணாவின் பாரம்பரியத்துக்கு எதிராக, கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியல் ஒரு முரண்பாடாக பார்க்கப்படுகிறது. அண்ணா தனது குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருந்தார், ஆனால் கருணாநிதி இதற்கு மாறாக செயல்பட்டாலும் உதயநிதி போன்ற வாரிசுகள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களது பின்னணி மட்டுமல்லாமல் திறமையும் முக்கியம் என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவரது மகன் இன்பநிதி, சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். இன்பநிதி, லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவர்.20 வயதுடையவர். அவர் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்க இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

33
Image Credit : our own

இன்பநிதியின் அரசியல் பிரவேசம் குறித்தும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. காரணம், சேலம் இளைஞரணி மாநாடு, மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் இன்பநிதி பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி தனது டவிட்டர் பக்கத்தில், மகன் இன்பதிநியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எந்த கேப்சனும் இன்றி பதிவிட்டுள்ளார். அதில் தந்தையும் மகனும், வெளிர் பச்சைநிற ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.

pic.twitter.com/GEeFweUGkW

— Udhay (@Udhaystalin) August 28, 2025

இந்த புகைப்படம் பல்வேறு வியூகங்களை கிளப்பி இருக்கிறது. இன்பநிதி அரசியலுக்கு வரவுள்ளதை உதயநிதி உணர்த்தி இருக்கிறார் என்கிறார்கள் பலரும்.

About the Author

TR
Thiraviya raj
உதயநிதி ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
அமெரிக்கா இனி அவுட்..! சீனாவிடம் சரணடைகிறதா இந்தியா..? மோடியின் ராஜந்தந்திரம் என்ன..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved