MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த டாப் ஹீரோ - அப்போ ADMK -வுக்கு கம்பி நீட்டிவிட்டாரா?

விஜய் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த டாப் ஹீரோ - அப்போ ADMK -வுக்கு கம்பி நீட்டிவிட்டாரா?

Star Campaign for Vijay Party:பிரபல நடிகர் அதிமுக விசுவாசியாக இருந்த நிலையில், தற்போது திடீர் என தவெக கட்சிக்கு பிரச்சாரம் செய்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 13 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மக்கள் நடிகர் ராமராஜன்:
Image Credit : Google

மக்கள் நடிகர் ராமராஜன்:

தமிழ் சினிமாவில், துணை இயக்குநராக இருந்து முன்னணி நடிகராக மாறியவர் தான் நடிகர் ராமராஜன். 1980–90களில் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் “மக்கள் நடிகர்” என்ற பெயரை பெற்றார். குறிப்பாக இவர் நடித்த "கரகாட்டக்காரன்", "எங்க ஊரு பாட்டுக்காரன்" போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
 அரசியலிலும் முக்கிய பங்கு:
Image Credit : our own

அரசியலிலும் முக்கிய பங்கு:

திரையுலகில் மட்டுமின்றி, அரசியலிலும் ராமராஜன் முக்கிய பங்கு வகித்தார். இவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் தன்மை, மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல ஆதரவை பெற்றுத்தந்தது.

37
மீண்டும் நடிப்பில் இறங்கிய ராமராஜன்:
Image Credit : our own

மீண்டும் நடிப்பில் இறங்கிய ராமராஜன்:

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த இவர், கடந்த ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதே நேரத்தில், அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டு தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.

47
தவெக கட்சியில் இணைந்து விட்டாரா?
Image Credit : Asianet News

தவெக கட்சியில் இணைந்து விட்டாரா?

தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து வருவது ஒருபுறம் இருக்க, ராமராஜன் நட்சத்திர பேச்சாளராக கலந்து கொண்டு, அதிமுக கட்சிக்கு வாக்கு சேகரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம்... இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒரேயடியாக விலகி தளபதி விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து விட்டாரா என கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

57
விபின் சக்ரவர்த்தியை ஆதரித்து பிரச்சாரம்:
Image Credit : vibin instagram

விபின் சக்ரவர்த்தியை ஆதரித்து பிரச்சாரம்:

அதாவது ராமராஜன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் விஜய் கட்சி வேட்பாளர் விபின் சக்ரவர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்த நிலையில், தற்போது இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

67
ராமராஜன் விளக்கம்:
Image Credit : vibin chakravarty instagram

ராமராஜன் விளக்கம்:

இதுகுறித்து ராமராஜன் கூறுகையில், "நான் விஜய்யின் தவெக கட்சியில் இணையவில்லை. கடந்த 35 வருடமாக என்னுடனே இருக்கும் உறவினர் விபின் சக்ரவர்த்தி. அவரை ஆதரித்து மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளேன்" என கூறியுள்ளார். இதன் மூலம் ராமராஜன் அதிமுக கட்சியில் இருந்து விலகவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

77
திமுகவில் மனைவி நளினி
Image Credit : Twitter

திமுகவில் மனைவி நளினி

ராமராஜன் ஒருபுறம், அதிமுகாவில் இருந்து கொண்டு தளபதி விஜய்யின் கட்சிக்கு பிரச்சாரம் செய்து வந்தாலும், இவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான நளினி திமுக தலைவர் எம்.கே. ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
தமிழ் சினிமா
அரசியல் சுவாரஸ்யம்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Recommended image2
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
Recommended image3
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved