- Home
- Politics
- சீமானும், விஜயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்..! எதிர்காலம் இல்லை... ஓங்கியடிக்கும் வன்னியரசு..!
சீமானும், விஜயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்..! எதிர்காலம் இல்லை... ஓங்கியடிக்கும் வன்னியரசு..!
சீமானும், விஜயும் ஒரே களத்தில் இருப்பவர்கள் தான். அதை நாங்கள் புரிந்து கொண்டோம். மக்களும் புரிந்து கொள்வார்கள். 2020 தேர்தலில் திமுக தான் ஆட்சிக்கு வரும்.

தமிழ்நாட்டில் சீமானும், விஜயும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒட்டுப்புழுக்களாக உள்ளதாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார்.
உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘சீமான் அவர் ஆர்எஸ்எஸின் ஒட்டும் புழு. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பாஜக எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு உத்தியை கையாள்வார்கள். ஒரு வலிமையான கட்சியை வீழ்த்துவதற்கு இன்னொரு மாநில கட்சி கையில் எடுப்பார்கள். அப்படி கபளீகரம் செய்யப்பட்ட ஒரு கட்சி அதிமுக. விஜய் திமுக எதிர்ப்பை முன் வைக்கிறார். சீமான் திமுக எதிர்ப்பை, வெறுப்பை முன் வைக்கிறார்.
பாஜக திமுக வெறுப்பை, திமுக எதிர்ப்பை முன்வைக்கிறது. ஆக மூன்று பேருக்கும் ஒரே இலக்கு என்றால் அது திமுக தான். திமுகவை ஒழித்து விட்டால் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வெல்ல முடியும் என்று நினைக்கிறது. அதற்காக களமிறக்கிவிடப்பட்ட நபர்கள் தான் விஜயையும், சீமானும். ரெண்டு பேருமே பாஜகவின் ஒட்டு புழுக்கள். அவர்கள் திமுக எதிர்ப்பு என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு பேருமே சனாதனத்தை, பாஜகவை ஏற்றுக் கொண்ட கட்சிகள். மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2026 தேர்தல் என்பது விஜய்க்கு சினிமாவுக்கு வாய்ப்பாவது கிடைக்குமா? என்கிற நிலைமையில் தான் இருக்கிறது. இத்தோடு அவருக்கு எதிர்காலம் இல்லை. சீமான் ஏற்கனவே அம்பலப்பட்டு நிற்கிறார். அவர் வெறுப்பு அரசியலை கட்டமைத்ததை தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆக பாஜகவால் இயக்கப்படுகின்ற ஒட்டுப் புழுக்கள் தான்.
சீமானும், விஜயும் ஒரே களத்தில் இருப்பவர்கள் தான். அதை நாங்கள் புரிந்து கொண்டோம். மக்களும் புரிந்து கொள்வார்கள். 2020 தேர்தலில் திமுக தான் ஆட்சிக்கு வரும். திமுக தலைமையிலான திமுக தலைமை என மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும் என்பதில் என்ற மாற்றுக் கருத்தும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.