MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Politics
  • விஜய்யை கட்டுக்குள் வைக்க சொல்லும் ரகசிய சர்வே.! சாட்டையெடுக்க தயாராகும் பாஜக.! சரண்டர் ஆக நினைக்கும் திமுக.!

விஜய்யை கட்டுக்குள் வைக்க சொல்லும் ரகசிய சர்வே.! சாட்டையெடுக்க தயாராகும் பாஜக.! சரண்டர் ஆக நினைக்கும் திமுக.!

ரகசிய சர்வே முடிவுகளால் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக மற்றும் பாஜக கட்சிகள் அவரை எதிர்கொள்ள வெவ்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Feb 17 2026, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பீஸ்ட்டு! பீஸ்ட்டு!    சாதகமான சர்வே முடிவுகள்
Image Credit : instagram

பீஸ்ட்டு! பீஸ்ட்டு! - சாதகமான சர்வே முடிவுகள்

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை அறிவித்தது முதல் இன்று வரை, திராவிட மற்றும் தேசிய கட்சிகளின் கணக்குகளை தலைகீழாக மாற்றி வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் வெளியான சில ரகசிய சர்வே முடிவுகள் ஆளுங்கட்சியையும், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களையும் ஒருசேர அதிர வைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அதிர வைக்கும் ரகசிய சர்வே: விஜய்யின் 'வாக்கு வங்கி' பலம்!
Image Credit : instagram

அதிர வைக்கும் ரகசிய சர்வே: விஜய்யின் 'வாக்கு வங்கி' பலம்!

மத்திய அரசின் உளவுத்துறை மற்றும் ரகசிய ஏஜென்சிகள் நடத்திய ஆய்வில் ஒரு வியத்தகு உண்மை வெளியாகியுள்ளது. வரப்போகும் தேர்தலில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய் பக்கம் சாயும் என அந்த சர்வே முடிவுகள் எச்சரிக்கின்றன.

பெண்கள் வாக்குகள்: குடும்பத் தலைவிகளின் ஆதரவு இதுவரை பெரிய கட்சிகளுக்கே இருந்து வந்த நிலையில், அது இப்போது 'தளபதி' பக்கம் திரும்பியுள்ளது.

இளைஞர் சக்தி: முதல்முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களின் 70% முதல் 80% ஆதரவு விஜய்க்கே இருப்பதாக கூறப்படுகிறது. திமுக ஆதரவு ஊடகங்கள் நடத்திய உள்வீட்டு சர்வேயிலும் இதே முடிவுகள் எதிரொலித்துள்ளன. இது கோட்டை வரை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?
Related image2
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!
36
சாட்டையெடுக்க தயாராகும் பாஜக: மிரட்டலா? பணிய வைத்தலா?
Image Credit : X

சாட்டையெடுக்க தயாராகும் பாஜக: மிரட்டலா? பணிய வைத்தலா?

விஜய்யின் இந்த அசுர வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன."மிரட்டி பணிய வைக்கும் அரசியலை விட, விஜய்யின் வளர்ச்சியை ஒரு எல்லைக்குள் சுருக்க வேண்டும் என்பதில் டெல்லி மேலிடம் உறுதியாக இருக்கிறது." இதற்காக பழைய வழக்குகள் அல்லது விசாரணை அமைப்புகள் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுத்து, அவரை ஒரு 'நட்பு ரீதியிலான' கூட்டணிக்குள் கொண்டு வர சாட்டையை சுழற்ற பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

46
சரண்டர் மோடில் திமுக: நண்பனாக்கும் முயற்சி!
Image Credit : x

சரண்டர் மோடில் திமுக: நண்பனாக்கும் முயற்சி!

மறுபுறம், திமுக அரசு விஜய்யை நேரடியாக எதிர்ப்பதை விட, அவரை அரவணைத்துச் செல்வதே புத்திசாலித்தனம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. விஜய்யின் அரசியல் வருகை ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், அவரை ஒரு 'நண்பனாக' அல்லது 'நடுநிலை சக்தியாக' வைத்திருக்க திமுகவின் முக்கிய புள்ளிகள் காய் நகர்த்தி வருகின்றனர். விஜய்யின் அதிரடிப் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் திமுகவின் ஓட்டுக்களை பிரித்துவிடக் கூடாது என்பதில் அறிவாலயம் மிகவும் கவனமாக உள்ளது.

56
பெண்கள் பலத்தை குறிவைக்கும் 'மாஸ்டர் பிளான்'!
Image Credit : X

பெண்கள் பலத்தை குறிவைக்கும் 'மாஸ்டர் பிளான்'!

தன்னைச் சுற்றி நடக்கும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தை நன்குணர்ந்த விஜய், தனது அடுத்த மீட்டிங்கில் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான வாக்குறுதிகள்.

கல்வி உதவித்தொகை: மாணவ-மாணவிகளைக் கவரும் வகையில் கல்வி சார்ந்த புரட்சிகரமான திட்டங்கள்.

பெண்களின் பலமே ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால், அவர்களை நோக்கி தனது அரசியல் அஸ்திரங்களை வீச விஜய் தயாராகி வருகிறார்.

66
யார் யாருக்கு நண்பன்? யார் யாருக்கு எதிரி?
Image Credit : x

யார் யாருக்கு நண்பன்? யார் யாருக்கு எதிரி?

தமிழக அரசியலில் "யார் யாருக்கு நண்பன்? யார் யாருக்கு எதிரி?" என்பது இன்னும் சில மாதங்களில் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிடும். அதுவரை இந்த ரகசிய சர்வேக்களும், அரசியல் காய்நகர்த்தல்களும் தமிழகத்தை தகிப்பிலேயே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
அதிமுக பாஜக கூட்டணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?
Recommended image2
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved