- Home
- Politics
- நாங்கள் ஓடி ஒளி யவில்லை..! போலீஸ், அரசாங்கம் எல்லாம் திமுக பக்கம்..! ஸ்கெட்ச் போட்டு அடித்த தவெக..!
நாங்கள் ஓடி ஒளி யவில்லை..! போலீஸ், அரசாங்கம் எல்லாம் திமுக பக்கம்..! ஸ்கெட்ச் போட்டு அடித்த தவெக..!
மாநில அரசின் விசாரணை இருந்தால் தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான் தவறு செய்தது என திமுக அரசு உருவாக்கும். இதனால் எங்களுடைய வளர்ச்சி பாதிக்கும்

‘‘மாநில அரசின் விசாரணை இருந்தால் தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான் தவறு செய்தது என திமுக அரசு உருவாக்கும். இதனால் எங்களுடைய வளர்ச்சி பாதிக்கும்’’ என தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் இறப்புக்கு ஒரு நியாயம் கிடைக்கும். 100% இதில் ஒரு சதி திட்டம் இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அடை குற்றச்சாட்டாகச் சொல்லாமல் முறையாக நீதித்துறையை நாங்கள் அணுக நினைத்தோம். மீடியாக்களில் பேச முடியவில்லை. ஏனென்றால், ஒட்டுமொத்த காவல்துறையும், ஒட்டுமொத்த அரசும் எங்களுக்கு எதிராக இருக்கும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும்?
ஒரு வாரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள்தான் குற்றவாளி என்று சொல்லி வந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் பொறுமையாக இருந்தோம். சட்டரீதியாக இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவுக்கு தவறு என்பதை உச்சநீதிமன்றம் பதிவு செய்து இருக்கிறது. நாங்கள் மீடியாவிடமும் பேச முடியவில்லை. காவல்துறையையும் அணுக முடியவில்லை. அதே நேரத்தில் அந்த ஒரு வாரம் நீதிமன்றம் வெக்கேஷனில் இருந்தது.
உயர் நீதிமன்றம் எங்களுக்கு எதிரான ஒரு உத்தரவை உருவாக்கி சட்டரீதியாகவும் சரி, காவல்துறை மூலமாகவும் சரி, தமிழக அரசு செய்தி நிறுவனஙள் மூலமாகவும் சரி, தமிழக வெற்றி கழகம் தான் இதற்கு முழு பொறுப்பு என்று மாயத் தோற்றத்தை உருவாக்கினார்கள். சமூக வலைதளத்தில் இருக்கக்கூடிய எங்களது தம்பிகளை கைது செய்தார்கள். இன்றைக்கு எங்களுடைய முழுமையான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் முக்கியமான கோரிக்கையாக நாங்கள் கேட்டது ஒரு கமிட்டி அமைக்க கூறினோம்.உச்சநீதிமன்றம் 3 நபர்கள் கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கேட்டோம்.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டோம். அதையெல்லாம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று லேயர்களாக இன்று உத்தரவிட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றமே இந்த விசாரணையை கண்காணிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். 3 நம்பர் கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். சிபிஐ விசாரணை என்று சொல்லி இருக்கிறார்கள்.
எங்களுடைய கோரிக்கை ஏற்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் கமிட்டி உருவாக்கி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் இதை கண்காணிக்க இருக்கிறது. மாநில அரசின் விசாரணை இருந்தால் தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான் தவறு செய்தது என திமுக அரசு உருவாக்கும். இதனால் எங்களுடைய வளர்ச்சியை பாதிக்கும். சர்வேயில் கிட்டத்தட்ட 27 சதவிகிதம் ஆதரவோடு இந்த கட்சி இருந்து கொண்டிருக்கிறது. அதை எந்த அளவுக்கு முடக்க முடியும் என்று யோசித்தார்கள். நாங்கள் எங்களுடைய கட்சி தோழர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் வலுவாக இருக்கிறோம். விஜயின் ஒரே செய்தி 41 குடும்பங்களுடன் எங்களது பயணத்தை உறுதியாக தொடங்குவோம். உண்மையை மிகப் பெரிய அளவில் கொண்டு வருவோம்’’ எனக் கூறினார்.