MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காவி அடி... கழகத்தை அழி..! திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி.. அள்ளிக் கொண்டு போன அறிவாலயம்..!

காவி அடி... கழகத்தை அழி..! திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி.. அள்ளிக் கொண்டு போன அறிவாலயம்..!

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்தார். எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட அந்த தாய் இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன்

1 Min read
Author : Thiraviya raj
| Updated : Sep 18 2025, 11:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...
Image Credit : Asianet News

மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் நமது அம்மா, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மருது அழகுராஜ். அவரை  தவெகவிற்கு தள்ளிக் கொண்டு போவார்கள் என நினைத்து கொண்டிருக்கும் போது அறிவாலயம் அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. 

மருது அழகுராஜ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்' மற்றும் 'நமது அம்மா' நாளிதழ்களின் தலைமை ஆசிரியராக இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  ‘லேடியா? இந்த மோடியா’ மக்களால் நான் மக்களுக்காக நான்..’ போன்ற வாசகங்களை எழுதிக் கொடுத்தவர்.  2021 சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் ஓ.பி.எஸ் அணியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக செயல்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
எடப்பாடி பக்கம் போகமாட்டோம்
Image Credit : our own

எடப்பாடி பக்கம் போகமாட்டோம்

பாஜக தனித்து களமிறங்கினால் அதிமுக வாக்குகளைப் பெற ஓ.பி.எஸ் தேவை எனத் தெரிவித்தவர். அண்ணாமலையின் நடைபயணத்தை விமர்சித்து, பாஜகவின் வாக்கு வங்கி உண்மையில் உயரவில்லை என வாதிட்டவர். எடப்பாடி பழனிசாமியை  ‘சர்வாதிகாரி’ என விமர்சித்து, "விஷம் குடித்துச் செத்தாலும் எடப்பாடி பக்கம் போகமாட்டோம்" என ஆவேசமாகப் பேசியவர். ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சர் பதவியில் அமர்த்தியதை நினைவூட்டி, எடப்பாடியின் பழிவாங்கலை விமர்சித்தவர்.

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட்டால் மக்கள் காரித்துப்பி விடுவார்கள் என எச்சரித்தவர்.

33
அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக
Image Credit : our own

அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக

இந்நிலையில் சமீபகாலமாக அவர் தவெகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். ஆகையால் அவர் தவெகவில் இணையலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘‘அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்தார். எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட அந்த தாய் இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.  

’காவி அடி... கழகத்தை அழி!’ என அவர் எழுதிய கவிதை வரியை போல கழகத்தை (அதிமுக) அழிக்க புறப்பட்டுவிட்டாரோ! என உற்சாகமாகியுள்ளனர் உடன்பிறப்புகள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
பாகிஸ்தானுடன் கைகோர்த்த சவுதி அரேபியா..! இந்தியா- இஸ்ரேலுக்கு செக்..! துள்ளிக் குதிக்கும் சீனா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved