MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஒரு சின்னப் பையன் சிதைச்சிட்டானே..! கட்சியை கலைச்சிட்டு தவெக-வில் சேர்ந்துடுங்க சீமான்..! அதிபரை அடித்து வெளுக்கும் விஜய் விழுதுகள்..!

ஒரு சின்னப் பையன் சிதைச்சிட்டானே..! கட்சியை கலைச்சிட்டு தவெக-வில் சேர்ந்துடுங்க சீமான்..! அதிபரை அடித்து வெளுக்கும் விஜய் விழுதுகள்..!

உனக்கு என்று மக்கள் பணி இருக்கிறதல்லவா? நீ அதை பற்றி பேச வேண்டியதுதானே. எதற்கு நீ தளபதி விஜய் பத்தி பேச வேண்டும்? அவர் சனிக்கிழமை வருகிறார்... ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.. உனக்கு என்ன அதைப்பற்றி… உங்களை நாங்கள் எதிர்க்க வேண்டிய நோக்கமே கிடையாது. 

3 Min read
Thiraviya raj
Published : Sep 27 2025, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயையும், தவெகவையும், அவரது தொண்டர்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். முன்பு விஜயுடன் தோழமை பாராட்டிய சீமான், தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விஜயை கடுமையாகத் தாக்கி வருகிறார். 2024-ஆம் ஆண்டு ஏப்ரல், விஜய் தனது தவெக கட்சியைத் தொடங்கினார். அவர் "திராவிடக் கொள்கையும் தமிழ் தேசியமும் என் இரு கண்கள்" என்று அறிவித்ததும், சீமான் உடனடியாக வெடித்துக் கிளம்பினார். திராவிட இயக்கத்தை "தமிழர்களை அடக்கிய குடும்பம்" என்று குற்றம் சாட்டி, தமிழ் தேசியத்தை மட்டுமே உயர்த்திப் பிடித்தார்.

விஜயின், தமிழ் தேசியம், திராவிடக் கொள்கை, காங்கிரஸ்-பாஜக விமர்சனம், சுற்றுப்பயண ஏற்பாடுகள் என விஜயை குறி வைத்து வாலண்டரியாக தாக்கி வருகிறார் சீமான். நாதகவின் தமிழ் தேசியக் கொள்கைக்கு மாறாக, விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் என்கிற கலப்பு அணுகுமுறையை சீமான் ‘கூமுட்டைத் தனம்’ எனக்கூறி கடுப்பானார். ஒரு பக்கம் நில்லு... அல்லது மற்றொரு பக்கம் நில்லு; நடுவில் நின்னா லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என கிண்டல் செய்தார் சீமான்.

24
Image Credit : Asianet News

தவெக, நாதக என இரு கட்சிகளும் இளைஞர்களையும், கிறிஸ்தவ சமூகத்தையும் குறிவைக்கின்றனர். நாதக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 8 சதவிகிதம். அது தவெகவின் அரசியல் வருகைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாடக தொண்டர்கள் தவெகவிற்கு தாவி வருகின்றனர். விஜய் அண்ணா வழியில் போகிறார். பிரபாகரன் வழியில் நான்" என்கிறார். விஜய்யின் சனிக்கிழமை பிரச்சாரத்தை "வாரத்தில் 6 நாட்கள் மனப்பாடம், ஒரு நாள் பிரச்சாரம்; அரசியல் சினிமாவாக மாற்றியிருக்கிறார் விஜய்" எனச் சாடுகிறார் விஜய். "தமிழக வெற்றிக் கழகம் என்றால் திராவிடம் பேசுபவர் ஏன் உலக வெற்றிக் கழகம் என்று வைக்கவில்லை?" என்று சீமான் கிண்டல் செய்கிறார்.

விஜயை சீமான் தொடர்ந்து விமர்சித்து வருவதால் தவெக தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ள தவெக இளைஞர் ஒருவர், ‘‘சீமான் இருக்கார்ல, அவர் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு முன்னால் என் தம்பி விஜயை நான் தான் வரச் சொன்னேன். என் தம்பிக்கு நான் ஆதரவு தெரிவிப்பேன் என்றார். நாங்க உங்கள் ஆதரவை கேட்டோமா? உங்களை அண்ணனாக நாங்கள் முதலில் ஏற்றுக் கொண்டோமா? உன்னை நம்பித்தான் 56 பேரை இழுத்துக் கொண்டு போய் மைக் சின்னத்தில் ஓட்டு போட வைத்தேன்.

Related Articles

Related image1
விஜய்க்கு 2 முகம் இருக்கு..! ஏமாறப்போவது திமுகதான்..! உண்மையை உடைத்து அதிர வைக்கும் பிஸ்மி..!
34
Image Credit : x/seeman

அன்னைக்கு எங்க தலைவர் மைக்கை மட்டும் தான் காட்டினார். ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒரு இசை வெளியீட்டு விழாவில் மைக்கை கொடுத்தார். அந்த இசை வெளியீட்டு விழாவில் சாம்பைனை எடுக்கட்டுமா..? மைக்கை எடுக்கட்டுமா? என்று சொன்னார். நீ எங்களை ஏமாற்றி விஜய் ஆதரவு தெரிவிக்கிறார் என்று சொல்லி ஓட்டு வாங்கினாய். வாங்கிவிட்டு இன்றைக்கு எங்களை அணில் குஞ்சுகள் என்கிறாய். என்னென்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறாய். எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய தலைவர். ரெண்டு சனியன்களை சேர்த்துக் கொண்டு ஒரு சனியன் சனிக்கிழமை பிரச்சாரம் வருகிறது என்கிறாய். இப்படி பேசுவதெல்லாம் ஒரு அரசியல் தலைவருக்கு அழகா?

போன ரெண்டு நாளைக்கு முன்னாடி பேட்டி கொடுக்கிறார், அப்போது என்ன சொன்னார் என்றால் அண்ணன் தம்பிக்குள் பிரச்சனைகளை உண்டாக்குகிறார்களா? என்று கேட்கிறார். அப்படியே மாற்றி நாங்கள் தம்பியை எதிர்க்கவில்லை. கொள்கையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். அப்படி என்றால் எதற்கு நீ கட்சி ஆரம்பித்தாய்? விஜயை, அவரது கொள்கைகளை எதிர்க்கவா கட்சி ஆரம்பித்தாய்? வேண்டுமென்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு எங்கள் தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பதவியை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களின் அந்த கொள்கையை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

44
Image Credit : Google

எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் திருத்தித் தர கேட்டோமா? அன்றைக்கு திராவிடத்திற்கும், தமிழருக்குமான போர் என்று சொன்னாய். இன்று ரசிகர்களுக்கும், கொள்கை கூட்டணிக்கும்தான் போர் என்கிறாய். நீ எங்கிருந்து வந்தாய்? எத்தனை படம் டைரக்ட் பண்ணி இருக்கிறாய்? எத்தனை படத்தில் நடித்திருக்கிறாய்? உன்னை வேறு நடிகன் என்று சித்தரிக்க வேண்டுமா? நாங்கள் உங்களைப் பற்றி ஏதாவது பேசுகிறோமா? போகிற பக்கம் எல்லாம் அணில் குஞ்சு என்கிறாய். மைக் கிடைத்தால் அணில் குஞ்சு அணில் குஞ்சு… என்று கதறுகிறாய். நாங்கள் உனக்கு ஓட்டுப்போட்டதை என்னைக்கும் மறந்து விடாதே.

😂👌ஆமை கறி உங்கள அண்ணனா முதல்ல நாங்க ஏத்துக்கிட்டோமா உங்கள நம்பி 56 பேர கூட்டிட்டு போய் ஓட்டு போட வச்சேன் மைக் சின்னத்துல இந்த அணில வச்சுதான் நீங்க 8.5 சதவீதம் ஓட்டு வாங்குனீங்க மறந்துடாதீங்க விஜயை விமர்சித்த சீமானை கடுமையாக சாடிய த.வெ.க தொண்டர்#உங்கவிஜய்_நா_வரேன்pic.twitter.com/yxKnsn1TcI

— 𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@TvkLeo2024) September 27, 2025

உங்களை நாங்கள் எதிர்க்க வேண்டிய நோக்கமே கிடையாது. நாங்கள் எங்கள் தளபதியை மக்கள் பணி செய்வதற்காக கொண்டு வருகிறோம். உனக்கு என்று மக்கள் பணி இருக்கிறதல்லவா? நீ அதை பற்றி பேச வேண்டியதுதானே. எதற்கு நீ தளபதி விஜய் பத்தி பேச வேண்டும்? அவர் சனிக்கிழமை வருகிறார்... ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.. உனக்கு என்ன அதைப்பற்றி’’ என கடுமையான ஆவேசத்தை தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
சீமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
Recommended image2
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
Recommended image3
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
Related Stories
Recommended image1
விஜய்க்கு 2 முகம் இருக்கு..! ஏமாறப்போவது திமுகதான்..! உண்மையை உடைத்து அதிர வைக்கும் பிஸ்மி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved