MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Chennai Flood: ஆட்சிகள் மாறினாலும்... கட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறவில்லை! அரிய புகைப்பட தொகுப்பு..

Chennai Flood: ஆட்சிகள் மாறினாலும்... கட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறவில்லை! அரிய புகைப்பட தொகுப்பு..

இயற்க்கை சீற்றங்கள் என்பது எப்போதுமே யாராலும் கணிக்க முடியாத ஒன்று, வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்றவை எப்போது ஏற்படும் என யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. அப்படி தான், தற்போது பெய்து வரும் பருவ மழையால், சென்னை தத்தளித்து கொண்டிருக்கிறது.இது இந்த வருடம் மட்டும் அல்ல... இது போல் பல முறை பெய்த மழையால் சென்னை மக்கள் அவதி பட்டுள்ளனர். ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறினாலும் மாறாத அந்த காட்சியை நினைவு படுத்தும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 09 2021, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும், இது போன்ற இயற்க்கை சீற்றங்கள் சென்னையை விட்டு வைக்கவில்லை. அப்போது பெய்த மழையில் சென்னை நகரம் தத்தளித்த போது எம்.ஜி.ஆர் பார்வையிட்ட காட்சி.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

எம்.ஜி.ஆர் போலவே தமிழகத்தை ஆண்ட தலை சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவர், மு.கருணாநிதி. முதல்வராக தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்துள்ளார். இவருடைய ஆட்சி காலத்திலும், இதே போன்ற வெள்ளம் பெருக்கெடுத்து சென்னையை மூழ்கடித்த போது அவர் மக்களை சந்திக்க தண்ணீரில் வந்த அந்த காட்சியின் புகைப்படம் இது.

 

36

கருணாநிதியை தொடர்ந்து தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலும் இதே போன்ற மழை வெள்ளம், சென்னை மட்டும் இன்றி தமிழகத்தையே சூழ்ந்தது. அப்போது அவரும் எம்.ஜி.ஆர், கருணாநிதி போல் வெள்ளத்தில் இறங்கி மக்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படம் இதோ...

 

46

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், காஜ புயல் உள்ளிட்ட இயற்க்கை சீற்றங்களால் சென்னை மற்றும் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட போது, மற்ற முதல்வர்கள் போலவே மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

 

56

இவர்களை தொடர்ந்து, ஏற்கனவே சென்னை மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், தற்போதைய முதல்வராகவும் இருந்து வரும் மு.க.ஸ்டாலிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பகுதி மக்களுக்கு விரைந்து உதவி செய்யும் முதல்வராக களத்தில் இறங்கி இருந்தாலும், இனி இதுபோல் சென்னையை மழை நீர் சூழ்ந்ததால் மக்களை பாதிக்காத வண்ணம், மழை நீரை முறையாக சேமிக்கும் வகையிலும் கடலில் சென்று கலந்திடவும் ஏதேனும் ஆக்கபூர்வ நடவடிக்கையில் ஈடுபடுவாரா? என்பதே சென்னை மக்களின் எதிர்பாப்பாக உள்ளது.

 

66

முதல்வர் ஸ்டாலினை போலவே... தற்போது அவரது மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் தற்போது சென்னையில் பாதிக்க பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த புகைப்படம் இதோ...

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Recommended image2
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
Recommended image3
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved