- Home
- Politics
- ஓபிஎஸை வேரறுக்க தேனியில் எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்..! ஆபரேஷன் அனுராதா..! திணறும் திமுக..!
ஓபிஎஸை வேரறுக்க தேனியில் எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்..! ஆபரேஷன் அனுராதா..! திணறும் திமுக..!
ஓபிஎஸ் என்ட்ரியால் தேனி மாவட்ட திமுகவில் ஏற்கனவே இருந்த கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சண்டையை அதிமுக தனக்கு சாதகமாக அறுவடை செய்ய காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது.

தமிழக அரசியலின் 'சென்சிட்டிவ்' மண்டலமான தேனி மாவட்டத்தில், தற்போது வீசும் அரசியல் காற்று வழக்கத்தை விட அதிக வெப்பமாக இருக்கிறது. ஒரு காலத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தேனியை, திமுக தன்வசப்படுத்திய நிலையில், இப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுக முகாமுக்குள் அடியெடுத்து வைத்திருப்பது அந்த மாவட்ட திமுகவினரிடையே பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தபோது அவரை அறிவாலய வாசலில் நின்று வரவேற்ற தங்க தமிழ்ச்செல்வன், தேனிக்குள் தன்னோட மாவட்ட செயலாளர் கெத்தை காட்டுகிறார். தேனி மாவட்டத்திற்கு இரண்டு மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். போடி, பெரியகுளம் 2 தொகுதிகள் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக இருக்கிற தேனி வடக்கிலும், ஆண்டிபட்டியும், கம்பமும் கம்பம் ராமகிருஷ்ணன் மாவட்ட செயலாளராக இருக்கிற தேனி தெற்கிலும் வருகிறது. தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில் இருக்கிற போடி தொகுதியில் ஓபிஎஸ் போட்டி போடுவது என முடிவான நிலையில் தொகுதி இருக்கக்கூடிய ஒரு சில ஊர்களில் தேர்தல் புறக்கணிப்பு என போஸ்டர் ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
இன்னொரு தொகுதியான பெரியகுளத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான சரவணகுமார் தான் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கும் இந்த முறை சீட்டு இல்லை என்று சொல்கிறார்கள். இந்த தொகுதியை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆக, தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிராக இந்த தொகுதிகளும் உள்ள நிலையில், கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் தொகுதியை தாண்டி வெளியே வருவதில்லைல் இந்நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார் சிட்டிங் எம்எல்ஏ -வான மகாராஜன். இந்த முறை ஆண்டிப்பட்டி தொகுதியில் ஓபிஎஸ் தன் மகன் ரவீந்திரநாத்துக்காக சீட்டு கேட்க, அதே தொகுதிக்கு தங்க தமிழ்ச்செல்வன் தன் மகன் நிஷாந்த் குமாருக்கு சீட்டு கேட்டு மல்லுக்கு நிற்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டு தேனி மாவட்ட திமுக செயலாளர் எதிரும், புதிருமாக இருக்க, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தப் பார்க்கிறது அதிமுக. ஓபிஎஸை எதிர்க்க பலபேரை பரிசீலித்த எடப்பாடி பழனிச்சாமி போடி தொகுதியை கூட்டணி கட்சியான அமமுகவுக்கு கொடுத்து டிடிவி.தினகரன் மனைவி அனுராதாவை களம் இறக்க திட்டமிடுகிறார். ஒருவேளை போடியில் போட்டியிட அதிமுக விரும்பினால் ஆண்டிபட்டியில் அனுராதாவை போட்டியிட வைக்க முயற்சிகள் நடக்கிறது.
"வீட்டுச் சண்டை வெளியூர்க்காரனுக்கு லாபம்" என்பது போல, திமுகவின் இந்த ஈகோ யுத்தம் எடப்பாடிக்குத் தேனியில் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கப்போகிறதா? அல்லது ஸ்டாலின் தலையிட்டு இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? தேனி மாவட்ட அரசியல் இப்போதைக்கு ஒரு 'ஹாட் சீட்' தான்!
