MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • டாக்டர் பட்டம்... பேராசிரியர் பதவி..! மெத்தப் படித்தும் மாட்டு மூளையான தீவிரவாதிகள்..! அம்பலமான இருண்ட ரகசியங்கள்..!

டாக்டர் பட்டம்... பேராசிரியர் பதவி..! மெத்தப் படித்தும் மாட்டு மூளையான தீவிரவாதிகள்..! அம்பலமான இருண்ட ரகசியங்கள்..!

அவர்களின் கல்வி செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, ​​இவ்வளவு கல்வி இருந்தபோதிலும் அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியும் என்பதுதான் முதன்மையான கேள்வி.

4 Min read
Thiraviya raj
Published : Nov 12 2025, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : X

டெல்லி குண்டுவெடிப்புகள் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளன. செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இன்னும் இந்தக் காட்சியின் பயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த இருண்ட இரவை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அதிகம் பேசப்படும் நபர் டாக்டர் ஷாஹீன் ஷாஹித்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் பிரிவான ஜமாத்-உல்-மோமினாத்தின் ஒரு பகுதியாக டாக்டர் ஷாஹீன் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது வாழ்க்கை சர்ச்சையில் சிக்கியுள்ளது. அவரது கணவரும் கூட அவரது இருண்ட ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

24
Image Credit : Getty

சில காலத்திற்கு முன்பு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி மசூத் அசாரின் ஆடியோ பதிவு வைரலானது. அதில், ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் பிரிவான ஜமாத்-உல்-மோமினாத்தை உருவாக்குவது பற்றி அவர் கூறியிருந்தார். இந்தியாவில் டாக்டர் ஷாஹீன் பனஙகுபெற்றுள்ள அதே பெண்கள் பிரிவு இது என்று கூறப்படுகிறது. டெல்லி தாக்குதலுக்கு முன்பு மசூதின் சகோதரி சாதியா அசாருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த அமைப்பை பாகிஸ்தானில் சாதியா அசாரின் சகோதரி வழிநடத்துகிறார். சாதியா அசாரின் கணவர் யூசுப் அசார். 1999 காந்தஹார் விமானக் கடத்தலில் முக்கிய மூளையாக இருந்தார். இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடந்த ஆபரேஷன் சிந்தூரின் போது யூசுப் கொல்லப்பட்டார்.

சாடியாவின் தகவல்படி, டாக்டர் ஷாஹீன் இந்தியாவில் ஜெய்ஷ்-இன் பெண்கள் பிரிவை உருவாக்கி வந்தார். டாக்டர் ஷாஹீன் இதற்கு முன்பு ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். லக்னோவில் வசிக்கும் ஷாஹீன், மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஜாபர் ஹயாத்தை மணந்தார். அவருக்கு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவர்களைப் பற்றிய சரியான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Related Articles

Related image1
எங்களுக்கு சீட்டே வேண்டாம்..! சட்டமன்றத் தேர்தலில் தெறித்து ஓடும் அதிமுக சீனியர்கள்.! சிக்கலில் இபிஎஸ்..!
34
Image Credit : X

டாக்டர் ஷாஹீனை ஜாபர் ஹயாத் திருமணம் செய்து கொண்டது நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2015-ல் அவர்கள் பிரிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். விவாகரத்துக்கான காரணம் டாக்டர் ஷாஹீனுக்கும், டாக்டர் முசம்மிலுக்கும் இருந்த தொடர்புதான் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். விவாகரத்துக்குப் பிறகு, ஷாஹீன் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டாக்டர் முசம்மிலும் அங்கு பணிபுரிந்தார். இந்த காலகட்டத்தில், டாக்டர் ஷாஹீன் சயீத் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் ஈர்ர்பின் கீழ் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

டாக்டர் ஷாஹீன் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் ஏழு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பது விசாரணையில் தெரியவந்தது. டாக்டர் ஷாஹீன் யுபிபிஎஸ்சி மூலம் விரிவுரையாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2006-ல் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். செப்டம்பர் 2009=ல், அவர் கன்னோஜ் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பிறகு, அவர் மார்ச் 2010-ல் கான்பூருக்குத் திரும்பினார்.

சக பேராசிரியருடனான தகராறு காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கன்னோஜில் இருந்து திரும்பிய பிறகு, டாக்டர் ஷாஹீன் மார்ச் 2010 முதல் 2013 வரை அங்கேயே இருந்தார். பின்னர் ஒரு நாள், அவர் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென காணாமல் போனார். கல்லூரி நிர்வாகம் அவரக் கண்டுபிடிக்க விரிவான முயற்சிகளை மேற்கொண்டது. அவரது லக்னோ முகவரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை. பின்னர், 2020 ஆம் ஆண்டில், கல்லூரியில் சேர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி சேர தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அப்போதும் கூட, அவர் நேரில் ஆஜராகவில்லை. கடிதங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டார்.

44
Image Credit : Google

ஆனால் 2021 ஆம் ஆண்டில், ஏழு ஆண்டுகளாக அவர் வராதது உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக அரசு அவரை பணிநீக்கம் செய்தது. ஷாஹீனின் குணம் பொதுவாக அமைதியாக இருந்தாகவும், சில சமயங்களில் நோய், குடும்ப காரணங்களுக்காகவும் அவர் அடிக்கடி விடுப்பு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் டாக்டர் உமர் என்று கூறப்படுகிறது. உமரை தவிர, இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் முஸம்மில், டாக்டர் ஷாஹீன், டாக்டர் அடில், டாக்டர் மொஹியுதீன் ஆகியோரின் பெயர்களும் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் தொடர்புடையவர்கள். ஒரு பெரிய திட்டத்தில் செயல்பட்டனர். ஆனால் புலனாய்வு அமைப்புகள் அவர்களின் திட்டங்களை முறியடிப்பதில் பெருமளவில் வெற்றி பெற்றன.

இந்த சம்பவத்திற்கு முன்பு, இந்த டாக்டர் கும்பலின் மறைவிடங்களில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் அவர்களின் பெயர்கள் வெளிவந்து அவர்களின் கல்வி செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, ​​இவ்வளவு கல்வி இருந்தபோதிலும் அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியும் என்பதுதான் முதன்மையான கேள்வி.

லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீதைப் பற்றி பேசும்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு பயங்கரவாத தொழிற்சாலையை நடத்தும் ஹபீஸ், இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் அரபியில் நிபுணத்துவம் பெற்றார். அங்கு அவர் ஒரு பேராசிரியராகவும் இருந்துள்ளார். ஹபீஸ் சயீத் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர். அவர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பட்டியலில் உள்ளார். அவர் 26/11 மும்பை தாக்குதலின் குற்றவாளி.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற யாகூப் மேமன் ஒரு பட்டயக் கணக்காளர். ஜூலை 30, 2015 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி மன்சூர் பீர்பாய் ஒரு மென்பொருள் பொறியாளர். யாகூவிலும் பணியாற்றியுள்ளார்.

அல்-கொய்தாவின் முதல் ஜெனரல் ஒசாமா பின்லேடன். அவர் மே 2, 2011 அன்று அமெரிக்க நடவடிக்கையில் கொல்லப்பட்டார். ரியாத்தில் பிறந்த பின்லேடன் 1979 வரை சவுதி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்தார். அவர் தனது ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை ஜெட்டாவில் பெற்றார். 1981-ல் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்-அஜிஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். ஆப்கானிஸ்தானில் சோவியத் போர் முடிந்த பிறகு, உலகம் முழுவதும் ஜிஹாத் செய்ய பின்லேடன் 1988-ல் அல்-கொய்தாவை நிறுவினார்.

அய்மான் அல்-ஜவாஹிரி முன்னாள் அல்-கொய்தா தலைவர். மருத்துவப் பட்டம் பெற்றவர். அவர் எகிப்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல்களின் மூளையாக அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஜூலை 2022-ல் இறந்தார்.

அபு பக்கர் அல்-பாக்தாதி முன்னாள் ISIS தலைவர். இஸ்லாமிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார். 2010 முதல் 2019 வரை ஐஎஸ்ஐஎஸை வழிநடத்தினார். பாக்தாதி ஒரு காலத்தில் பயத்திற்கு ஒத்த பெயராக இருந்தார். அவர் 2019 அக்டோபரில் இறந்தார்.

ஜாகிர் மூசா முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பயங்கரவாதியாக மாறுவதற்கு முன்பு பி.டெக் படித்து வந்தார். மூசா நூர்பராவில் உள்ள நூர் பப்ளிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் நூர்பராவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்தார். அவர் 2019-ல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அவரது உண்மையான பெயர் ஜாகிர் ரஷீத் பட்.

9/11 விமானக் கடத்தல்காரர்கள் உயர் கல்வி கற்றவர்கள். அவர்கள் சவுதி அரேபியா, எகிப்தில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். முக்கிய விமானக் கடத்தல்காரரான முகமது அட்டா, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். பின்னர் ஹாம்பர்க்கில் நகர்ப்புற வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மர்வான் அல்-ஷெஹி மற்றும் ஜியாத் ஜரா ஆகியோரும் ஜெர்மனியில் படித்தவர்கள். ஜியாத் ஜரா ஒரு பணக்கார லெபனான் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹாம்பர்க் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

About the Author

TR
Thiraviya raj
பயங்கரவாதத் தாக்குதல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved