MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Politics
  • திமுக தான் ஏமாற்றும்..! திமுகவை யாரும் ஏமாற்ற முடியாது..! அன்புமணி ஆவேசம்..!

திமுக தான் ஏமாற்றும்..! திமுகவை யாரும் ஏமாற்ற முடியாது..! அன்புமணி ஆவேசம்..!

இந்த தீர்ப்பு வழங்கிய பிறகும் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை, கோழைத்தனம். இது நம்பிக்கை துரோகம். தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக நான் பார்க்கின்றேன்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Nov 12 2025, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

‘‘தமிழக மக்கள் திமுக அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். சாதரண கோபம் கிடையாது. சுனாமியாக வந்து திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும்’’ என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இது குறித்துப்பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது சாதிவாரி கணக்கெடுப்பு. நான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். தமிழ்நாடு இந்த வேகத்தில் சென்றால் 50 ஆண்டுகளில் வளரும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். ஆனால் அதை எடுக்க மாட்டோம், எடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாக ஸ்டாலினும், அவருடைய கூட்டணி கட்சிகளும் இருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

காங்கிரஸ் கட்சியை கிட்டத்தட்ட கர்நாடகாவில் எடுத்து முடித்து இரண்டு முறையாக எடுத்து முடித்து விட்டார்கள். தெலுங்கானாவில் எடுத்து முடித்தார்கள். ஆந்திரா, ஒடிசா, ஜார்ஜ்கண்ட், பீகார் மாநிலத்தில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். ஆனால் இங்கே எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுகின்ற முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இது தமிழ்நாட்டிற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.

Related Articles

Related image1
பவளவிழா பாப்பா.. உன் பாசாங்கால் நாடே சிரிக்கிறது பாப்பா..! திமுகவின் மானத்தை பங்கம் செய்த விஜய்..!
34
Image Credit : google

சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்த மாட்டோம், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கின்ற வழக்கு. வழக்கு என்னவாகும் ரத்து செய்யும் சூழல் ஒரு பக்கம். அடுத்தது கர்நாடகா உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பின்படி இந்தியாவிலே மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம், எந்த தவறும் கிடையாது எந்த தடையும் கிடையாது என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மாதம் வழங்கி இருக்கிறது.

44
Image Credit : Facebook/anbumani

இந்த தீர்ப்பு வழங்கிய பிறகும் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை, கோழைத்தனம். இது நம்பிக்கை துரோகம். தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக நான் பார்க்கின்றேன். நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் கோபமாக இருக்கிறார்கள். சாதரண கோபம் கிடையாது. சுனாமியாக வந்து திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும். அந்த அளவுக்கு கோபத்தில் ஆத்திரத்தில் இருக்கின்றார்கள். மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. வெறும் அறிவிப்புகள் தான் வந்திருக்கிறது. விளம்பர அரசியல் செய்கிறார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
பவளவிழா பாப்பா.. உன் பாசாங்கால் நாடே சிரிக்கிறது பாப்பா..! திமுகவின் மானத்தை பங்கம் செய்த விஜய்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved