MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காவிட்டாலும், மத்தியில் பாஜக ஆட்சி தொடரும்- அண்ணாமலை

தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காவிட்டாலும், மத்தியில் பாஜக ஆட்சி தொடரும்- அண்ணாமலை

தென் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜகவின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை தமிழகத்தில் மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 23 2023, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரிவினையை தூண்டும் திமுக

என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதல் கட்டம் நேற்று நெல்லையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து வருகிறது அதனை இந்த யாத்திரை மாற்றி அமைக்கும். தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையும் பிரிக்கும் வகையில் தவறான தகவல்களை தந்து திமுக அரசு மக்களிடம் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.திமுகவும் காங்கிரசும் குடும்பத்திற்காக நடத்தும் கட்சி மக்களை பற்றி எந்த கவலையும் பட்டது கிடையாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தமிழக வளர்ச்சியில் பாஜக

ஊழலும் குடும்ப நல்லனை வஞ்சிப்பது மக்களை பிரிப்பது தான் திமுகவின் பணியாக உள்ளது. காங்கிரசும் திமுகவும் அவர்களது மகன்களை பதவிக்கு கொண்டு வருவதற்கு தான் பணி செய்து வருகிறது. மக்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதற்கு பணம் வாங்கி ஒரு அமைச்சர் சிறைக்கு சென்றுள்ளார்.அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டபோது கொள்ளை அடிக்கப்பட்ட கோடி கோடியான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியா வளர்ச்சியை பாதிக்கும் வகையில் நடைபெறும் ஊழல் ஆட்சியை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. தமிழகத்தில் பாஜக ஆட்சி இல்லை என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாரத பிரதமர் தொடர்ந்து பணி செய்து வருகிறார்.குடும்ப ஆட்சி ஊழல் அடக்குமுறை அனைத்தையும் மீறி வெற்றி பெறுவோம். தமிழகத்தில் விரைவில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கும்
 

34

முதல் கட்ட பாதயாத்திரை வெற்றி

இதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை,  23 நாள் என் மண் என் மக்கள் யாத்திரை தென்மாவட்டங்களில் உள்ள 41 சட்டமன்ற தொகுதியில் நடந்துள்ளது.184 கிமீ பயனம் செய்து 17% பயனத்தை மேற்கொண்டு இந்த யாத்திரையின் முதல் கட்டத்தில் நிறைவு செய்துள்ளோம்.  எங்கே சென்றாலும் லஞ்ச லாவனியம் இருக்கும் தமிழகத்தில் மக்கள் வீடை தேடி எந்த வித சிபாரிசும் இன்றி மத்திய அரசின் திட்டம் சென்று சேரும் வகையில் கிடைக்கிறது.

தென் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த யாத்திரை மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளது. நேர்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என இளைஞர்கள் ஆதரவு தருகின்றனர். பாஜக மீது நம்பிக்கை உள்ள காரணத்தினால் தான் பெண்களுடைய ஆதரவு உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

44

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி

40 தொகுதிகளையும் நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தமிழகத்தை வளர்ப்போம். ஸ்மார்ட் சிட்டி என்றால் ஸ்மார்ட்  ரயில் வேண்டும். விரைவில் அதுவும் நெல்லைக்கு வர உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காவிட்டாலும் வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும். எனினும் தமிழக மக்கள் பாஜக மீதான அன்பு காரணமாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

‘என் மண் என் மக்கள்’: அண்ணாமலையின் முதற்கட்ட யாத்திரை நிறைவு; செப்.3இல் 2ஆம் கட்டம்!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பிஜேபி
திமுக
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved