MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! ஜப்பான் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! ஜப்பான் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டார்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.  

2 Min read
Author : Ajmal Khan
Published : May 29 2023, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
mk stalin

mk stalin

தொழில்முதலீடு - ஜப்பானில் ஸ்டாலின்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தின் போது பல்வேறு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.  இதனையடுத்து  25 ஆம் தேதியன்று  ஜப்பான் நாட்டின் ஒசாகா சென்றார். அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
mk stalin

mk stalin

 புல்லட் ரயிலில் ஸ்டாலின்

தனது இரண்டு நாள் ஓசாகா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று புல்லட் ரயில் மூலம் டோக்கியோ வந்தடைந்தார்.  அதனைத் தொடர்ந்து, இன்று (29.5.2023) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்  இஷிகுரோ நோரிஹிகோ (Mr. Ishiguro Norihiko) அவர்களையும், செயல் துணைத் தலைவர்  கசுயா நகஜோ (Mr. Kazuya Nakajo) அவர்களையும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

35

தமிழகத்தில் தொழில் முதலீடு

இதனை தொடர்ந்து  JETRO தலைவருடனான சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது,  நீங்கள் இதற்கு முன்பு NEC-இல் பணியாற்றியதாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் நாடு திரும்பும் முன்பு. நாளை அங்கு சென்று பார்வையிடலாம் என்று நினைக்கிறோம். JETRO இந்தியாவுடன் இணைந்து மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது.

45

Industry 4.0-ஐ நோக்கி தமிழ்நாடு

இதனை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. Industry 4.0-ஐ நோக்கி தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் ஐ.டி. திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும் இதைப் போன்ற துறைகளில் நாப் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார். 

55

மாநாடு வெற்றி பெற வாழ்த்து

இச்சந்திப்பின்போது, JETRO தலைவர் திரு. இஷிகுரோ நோரிஹிகோ அவர்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும். ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெறவுள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved