MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இரவில் வீடியோ கால் செய்து பாலியல் உறவுக்கு அழைக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்

இரவில் வீடியோ கால் செய்து பாலியல் உறவுக்கு அழைக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்

இரவு நேரத்தில் போன் செய்து பாலியல் உறவிற்கு ரவிந்தரநாத் அழைப்பதாகவும், மேலும் அதற்கு உடன்பட மறுத்தால், எனது குடும்பத்தையும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் காயத்திரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 01 2023, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஓ.பி.ரவிந்திரநாத் மீது பெண் புகார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவிந்திரநாத் மீது பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், நான் என் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். பள்ளிப் படிப்பை முடித்து நான் சென்னைக்கு வந்துவிட்டேன்,

அதன் காரணமாக அவ்வப்போது தொலை பேசியில் நாகபிரியாவுடன் பேசிக்கொள்வது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டு நாகபிரியாவின் தங்கையின் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகள் கவிதா; அவரது சகோதரர் ரவிந்தரநாத், ரவிந்தரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோரை நாகபிரியா அறிமுகம் செய்து வைத்தார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அது முதல் கவிதா மற்றும் ஆனந்தி ஆகியோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு, அதன் மூலம் ஆனந்தி தோழியான மலரின் நட்பு கிடைத்தது. அது முதல் நாகபிரியா, கவிதா, ஆனந்தி, மலர் ஆகியோருடன் நல்ல குடும்பம் போல் பழகி வந்தோம். அதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அவ்வப்போது சுற்றுலாவிற்கு செல்வது வழக்கம். இதனிடையே ரவிந்தரநாத் அவர்களுக்கும் மலருக்கும் தவறான தொடர்பு காரணமாக கணவன் மனைவியான ரவிந்தரநாத் மற்றும் ஆனந்தி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

அதன் காரணமாக ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மலர் அவர்கள் தனது கணவரான இயக்குனர் பாலா அவர்களை விவாகரத்து செய்துவிட்டு ரவிந்தரநாத் அவர்களுடன் கள்ள உறவில் வாழ்ந்து வருகிறார்.

36

இந்த பிரச்சனை காரணமாக ஆனந்தியிடம் பேசிய போது, ரவிந்திரநாத் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனது முதல் சபல புத்தி காரராக ஆகிவிட்டர். எனவும் பெண்கள் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும், தனது கணவர் மலருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும் என்னிடத்தில் கூறி வருத்தப்பட்டார். இதனிடையே எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2022 அண்டு விவாகரத்து ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரவிந்தரநாத். அவர்களின் எண்ணில் இருந்து எனது கை பேசி அழைப்பு வந்தது. ரவிந்தரநாத் அண்ணன் தான் பேசுகிறார் என்று எடுத்தேன். மறு முனையில் பேசியவர் தனது பெயர் முருகன் என்றும் தான் ரவிந்தரநாத் அவர்களின் நண்பர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் மேற்கூறிய நபர், ரவிந்தரநாத் அவர்கள் என் மீது ஆசைப்படுவதாகவும், 

46

என்னை ராணி போல் அவர் பார்த்துக் கொள்வார் எனவும் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு உடன்பட மறுத்த என்னை மேலும் ரவிந்தரநாத்துடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் அதற்கு உடன்பட மறுத்தால், எனது குடும்பத்தையும் மற்றும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஆனந்தியிடம் சொன்னதும் அவர் தனது கணவரான ரவிந்தரநாத் அவர்களிடம் கேட்டபோது,

யாராவது தனது கைபேசியை தவறாக பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்ததாக கூறினார். எனவே நானும் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  ரவிந்தரநாத் அவர்கள் நேரடியாக தனது கைபேசியில் இரவு 1 மணி வாக்கில் எனது தொலை பேசி  எண்ணிற்கு WHATS APP மூலம் தொடர்பு கொண்டார், நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். அவர் என்னைப் பற்றியும் எனது குடும்பம். பற்றியும் பேசத்தொடங்கிய அவர், 

56

ஒரு கட்டத்திற்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேசத் தொடங்கினார். என்னை பற்றியும் எனது உடலை பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் பேசினார். எனது கணவரை விவாகரத்து செய்து விட்டதன் காரணமாக தன்னுடன் உடல் உறவில் ஈடுபட வேண்டும் எனவும் அருவருப்பாக பேசினார். “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உனது வீட்டிற்கு வாரேன். இல்லை என்றால் அரசாங்க காரை அனுப்புகிறேன்.

ராணி மாதிரி வா உடலுறவில் ஈடுபடலாம் என்று 20 முறைக்கு மேல் கேட்க எனது காது கூசியது. நான் உங்கள் தங்கை போன்றவள் என்னிடத்தில் இவ்வாறு போசாதீர்கள் எனவும், நான் உங்களிடம் அண்ணன் என்ற முறையிலேயே பழகிவந்தேன். இது போன்ற என்னத்துடன் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று திட்டினேன் மரியாதையாக நான் சொன்னதைக் கேட்டு நட இல்லையேல் உன் குடும்பத்தினரை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். 

66

எவராலும் என்னை எதுவும் செய்ய முடியும். ஒழுங்காக எனது இச்சைக்கு இணங்கு இல்லையேல் உனது குடும்பத்தை அழித்து விடுவேன் என மிரட்டி வருகிறார். நான் பயத்தில் கைபேசியை துண்டித்து விட்டேன். எனவே  வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் என்னை தனது பதவி மற்றும் பணபலத்தைக் கொண்டு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

பாலியல் ரீதியான தனது ஆசைக்கு இணங்கும் படி துன்புருத்தியும் மற்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ரவிந்தரநாத் மற்றும் முருகன் ஆகியோர் மீது நான் அளிக்கும் இந்த புகாரினை ஏற்று, தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் காயத்திரி தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(88.5 ov)272/5
INDIND
-
Day 2 - Session 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வி.எஸ்.பாபு மறைவு.. கொளத்தூரில் அடுத்த அரசியல் அதிரடி..? மீண்டும் களமிறங்கும் ஸ்டாலின்..?
Recommended image2
TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசுக்கு புதிய சிக்கலா? இனி புதிதாக மதுக்கடைகள் திறக்க முடியாதா?
Recommended image3
TVK : அதிருப்தியில் 60 தவெக எம்.எல்.ஏ.க்கள்? விரைவில் ஆட்சி மாற்றம்... புது குண்டை தூக்கிப் போட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved