World Environment Day: புது மெத்தை வாங்குறப்ப இத மறந்துடாதீங்க!! உடம்புக்கு மட்டுமில்ல பூமிக்கும் ரொம்ப நல்லது
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, சுற்றுசுழலுக்கு மாசு விளைவிக்காத மெத்தையை வாங்குவது குறித்து பார்க்கலாம்.
மெத்தைகள் வாங்கிய புதிதில் நன்றாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் தூங்க அசௌகரியமாகவும், சுகாதாரமற்றதாகவும் மாறலாம். இதனால் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். நீண்ட காலமாக நீங்கள் பயன்படுத்தும் பழைய மெத்தைகள் எதிர்மறையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு மெத்தையை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதன் பின்னர் புதிய மெத்தையை வாங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, நம்முடைய முதுகில் உள்ள வலியையும் அசௌகரியத்தையும் குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கைக்கு உகந்த மெத்தை: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மெத்தையைத் தேர்ந்தெடுப்பது அதன் மறுசுழற்சியை எளிதாக்கும். மரத்தூள்/ துணி செய்யப்பட்ட மெத்தையை வாங்கலாம். இந்த மாதிரியான மெத்தனைகள் மூங்கில், பிர்ச் அல்லது யூகலிப்டஸ் மரங்கள் ஆகிய நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் இயற்கையான சுவாசம் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளையும் கொண்டிருக்கின்றன. இது குளிர் மற்றும் உலர் தூக்க அனுபவத்தை உறுதி செய்கிறது. இவ்வகை மெத்தைகள் மக்கும் தன்மை கொண்டவை. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படாது.
மெத்தை மறுசுழற்சி:
மெத்தை மறுசுழற்சி செய்யும்போது வீண் கழிவுகளை குறைக்கும். இயற்கைக்கு ஏற்ற சூழலியல் மெத்தைகளை வாங்குவது தான் மெத்தை மறுசுழற்சிக்கு உதவும். அதாவது மரத் துணி, தூய நுரை ( foam ) போன்ற இயற்கை தாவர பொருட்களால் செய்யப்பட்ட மெத்தைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நம் படுக்கைகளை ஆரோக்கியமாக பேண முடியும். பூமியின் சுற்றுசூழலும் மேம்படும்.
மெத்தை மறுசுழற்சி என்பது பூமியின் மேற்பரப்பில் போடும் குப்பைகளின் சுமையை குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முறையாகும். ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான மெத்தைகள் பூமியில் கழிவுகளாக கிடைக்கின்றன. மெத்தைகளை நாம் மறுசுழற்சி செய்வதன் மூலம், இந்த கழிவுகளின் கணிசமான பகுதியை நாம் குறைக்கலாம்.
எந்த மெத்தைகளை வாங்க வேண்டும்?
OEKO-TEX என்ற சான்று பெறப்பட்ட மற்றும் OEKO-TEX STeP சான்று அளிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மெத்தைகளை வாங்க வேண்டும். இந்த மெத்தைகளில் உள்ள பொருட்களில் ஓசோன் டிப்ளேட்டர்கள், எரியூட்டும் பொருள்கள், கன உலோகங்கள் ஆகிய தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருக்காது.
OEKO-TEX- என்ற சான்று கொடுக்கப்பட்ட தூய்மையான நுரை மெத்தைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதன் பயன்பாட்டிற்கு பின்னர் மறுசுழற்சியும் செய்யலாம். இவை பூமியின் மீதான மாசுபாட்டு தாக்கத்தை குறைக்கின்றன. ரப்பர் மரங்களிலிருந்து பெறப்பட்ட லேடெக்ஸ், பருத்தி, ஆடுகளிலிருந்து பெறப்படும் கம்பளி ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கும் மெத்தைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. இதை ரொம்ப் காலம் பயன்படுத்தவும் முடியும். நமக்கு மூச்சுத்திணறல், தூசி பூச்சிகளிடமிருந்தும், ஒவ்வாமையிடம் இருந்தும் எதிர்ப்பை வழங்குகிறது.
இதை உற்பத்தி செய்யும் போது குறைவான இரசாயனங்கள், செயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இவை பசுமையான தேர்வாக அமைகின்றன. இயற்கைக்கு ஏற்ற சூழலியல் மெத்தைகளை நாம் வாங்குவதன் மூலம் நமது ஆரோக்கியமான தூக்கத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்க முடியும்.