முதன்முறை விமானத்தை இயக்கியதும் பைலட்களுடைய சட்டை கிழிக்கப்படுவது ஏன்?
விமான பைலட்களின் சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன்? இது ஒரு சாதாரண நிகழ்வா அல்லது மரியாதைக்குரிய பாரம்பரியமா? இந்தக் கட்டுரை பைலட் பயிற்சியின் ஒரு சுவாரஸ்யமான நடைமுறையை ஆராய்கிறது.

விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருக்கும். இப்படி தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளும் இருக்கும். ஆனால் சட்டைகளின் பின் பகுதியை மட்டும் ஏன் கிழித்து தொங்க விட்டுள்ளனர்? அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என்று உங்களுக்கு தெரியுமா?
பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் பாரம்பரியமான நடவடிக்கையாக இந்த நடைமுறை செய்யப்படுகிறது. ஆம்.. பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். இந்த மாணவர்களின் சட்டையின் பின் பகுதியை, அவரது வழிகாட்டிதான் கிழிப்பார்.
kota pilot
ஒவ்வொரு பைலட்டின் வாழ்க்கையிலும், விமானத்தை முதல் முறையாக தனியாக இயக்குவது என்பது மிகப்பெரிய சாதனையாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் கருதப்படுகிறது. முதன்முறை விமானத்தை தனியாக இயக்கும்போது, தங்களது வழிகாட்டியின் தலையீடு இல்லாமல், தாங்கள் கற்று கொண்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் சுயமாகவே செய்ய வேண்டும்.
விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும்தான் மிகவும் சவாலான விஷயங்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும், வழிகாட்டியின் உதவிகள் இல்லாமல் மாணவர்கள் செய்ய வேண்டும். விமானத்தை தனியாக இயக்குவதற்கு தயாராகி விட்டேன் என்பதை மாணவர்கள் காட்டும் தருணம் இது.
woman pilot
விமானத்தை தனியாக இயக்குவது என்பது பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதி. எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு நடக்கும் விஷயம்தான் நமக்கு ஆச்சரியம்.
woman pilot
முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வந்த பின்னர், புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரிக்கோலால் கிழிப்பார். அதன் பின்னர் கிழிக்கப்பட்ட சட்டையில், புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விவரங்கள் எழுதப்படும்.
woman pilot
அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படும். இதனைதான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன. சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் தங்கள் மாணவர்கள் மீது, அதாவது புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
woman pilot
தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும்.