கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்யக்கூடிய..செய்யக்கூடாத..விஷயங்கள் என்னென்ன? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ..
Gokulashtami Special 2022: தமிழ்நாட்டில் நாளை வெள்ளிக்கிழமையில் கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
Gokulashtami Special 2022:
கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி (ஆவணி 3) அதாவது நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம்) என்றும் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. எனவே, நாம் இந்த பதிவில் கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Gokulashtami Special 2022:
செய்யக்கூடியவை:
1. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்ய வேண்டும்.
2. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டில் கிருஷ்ணர் பிறப்பதாக ஐதீகம் உண்டு.
Gokulashtami Special 2022:
3. அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானை சென்றடையும் வரை அவருடைய திருபாதங்களை வரைய வேண்டும்.
4. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானதாக இருந்து வருகிறது.
Gokulashtami Special 2022:
5. அன்றைய நாளில் பூஜை செய்து பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும்.
6. மேலும், உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதைபோல அலங்கரித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டு முறை குழந்தைகளின் கல்வி, உடல்நலனுக்கு நல்லது.
Gokulashtami Special 2022:
செய்யக்கூடாதவை:
1. இந்த நாளில் மாலை வரை குளிக்காமல் இருப்பது, வீட்டில் தரித்திரம் உண்டு பண்ணும்.
2. கசப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே, கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு உணவுகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்த நாளில் பெரியோர்களிடம் சண்டை, சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.
Gokulashtami Special 2022:
3. இந்த நாளில் இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டும் என்றால், கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை எளிய சிறுவர் சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்வி உதவிகளை செய்தால் நம் வாழ்வில் வேண்டிய வரத்தை கிருஷ்ணர் தருகிறார்.
4. இவ்வாறு செய்தால் வேண்டிய புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாக திறமை, அறிவாற்றல் அனைத்திலும் சிறந்து விளங்க முடியும்.