பெண்களே!! திருமணத்திற்கு முன் இந்த '5' விஷயங்கள் பண்ணா போதும்.. ஒரே மாதத்தில் ஒல்லியா, அழகா மாறிடுவீங்க!!
Bride Beauty Tips : திருமணமாகும் முன்பு பெண்கள் என்னென்ன விஷயங்கள் செய்தால் திருமண நாளன்று அழகாகவும், மெலிந்த உடல் அமைப்போடும் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
beauty tips for bride in tamil
பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சருமம் பளபளப்பாக இருக்க சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டியுள்ளது. அதிலும் திருமணமாகப் போகும் பெண்கள் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். அவர்கள் 5 விஷயங்களை பின்பற்றுவதால் அழகாகவும், மெலிந்த உடல் அமைப்போடும் இருக்கலாம் என ஆயுர்வேத மருத்துவர் தெரிவிக்கிறார்.
Skincare for brides in tamil
திருமணத்திற்காக எவ்வளவு தான் ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்டாலும், ஒரு பெண்ணின் இயற்கையான அழகுதான் அவளுக்கு பெருமையாக அமையும். முகத்தில் இயற்கையான பொலிவு கிடைக்க திருமணம் ஆகும் ஒரு மாதத்திற்கு முன்பே மணப்பெண் சில விஷயங்களை செய்ய வேண்டும். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக உங்களுடைய உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை செய்து கொண்டால் முகத்தில் பொலிவு பெற உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: பச்சை பாலில் முகம் கழுவுறவங்க '40' வயசானாலும் இளமையா இருக்கலாம் தெரியுமா?
Wedding skincare tips in tamil
ஒரு மாதம் செய்ய வேண்டியவை:
உங்களுக்கு திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இந்த விஷயங்களை கட்டாயம் செய்தால் மட்டுமே முழு பலன்களையும் பெற முடியும். நாள்தோறும் குங்குமப்பூ, மஞ்சள் ஆகியவை கலந்த பாலை குடிப்பதால் முகத்தில் பளபளப்பு ஏற்படும். வெந்நீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும். இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் இயற்கையாகவே முகம் பொலிவு பெற தொடங்கும். துரித உணவுகள் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!
Pre-marriage beauty routine in tamil
உங்களுடைய முகம் பொலிவு பெற வேண்டும் என்றால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கட்டாயம் தேவை. அதனால் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்வது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையானது. நீங்கள் எவ்வளவு தான் கவனமாக சாப்பிட்டாலும் மன அழுத்தம் இருந்தால் முகத்தில் தெரிய தொடங்கும். இதனால் உங்களுடைய அழகான முகத்தில் பருக்கள் கூட வரலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் உங்களுடைய முகம் வாடிய மலரை போல மந்தமாக காணப்படும். நீங்கள் நன்றாக தூங்கி நல்ல உணவுகளை எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் தீவிரநிலையை அடையாது. மிதமான சூடுள்ள வெந்நீர் தான் அருந்த வேண்டும். அதிக சூடான நீரை அருந்துவதால் உங்களுடைய முகத் தசைகள் தளர்ந்து வயதான தோற்றம் ஏற்படுகிறது.
Bridal skincare routine in tamil
கட்டாயம் செய்ய வேண்டியவை:
சரியான உணவு பழக்கத்தை கொண்டிருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும் அவசியம். எப்போதும் உணவை சூடாக சாப்பிடுவது நல்லது. துரித உணவுகளை மறந்தும் உண்ணக்கூடாது. இப்படி ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடலில் நச்சுக்கள் சேராது, முகமும் பளபளப்பாக காணப்படும். நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை வாக்கிங் செல்லலாம். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை 30 நிமிடங்கள் செய்வது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்க உதவும். மன அழுத்தத்தை குறைத்து உடலை நல்ல வடிவத்திற்கு கொண்டு வரவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன. முகமும் ஜொலிக்கத் தொடங்கும்.