இந்த வாரம் 12 ராசிகளின் பலன்கள்...மேஷம் ராசிக்கு வெற்றி, துலாம் ராசிக்கு தோல்வி.! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?
Weekly Horoscope 24th Oct to 30th Oct 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த 2022 ஆம் ஆண்டின் 24 அக்டோபர் முதல் 30 அக்டோபர் 2022 வரை எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மேஷம்:
இந்த வாரம் உங்களின் நீண்ட நாள் நம்பிக்கைக்கு வெற்றிகள் கிடைக்கும். வீட்டில் அமைதியான சூழல் இருக்கும். இந்த வாரம் உங்கள் பலவீனத்தை யாருக்கும் தெரிவிக்காமல் கவனமாக இருங்கள். இந்த வாரம் உங்கள் சகோதர, சகோதரிகளின் உடல்நிலையில் பிரச்சனை வரலாம். இந்த வாரம், தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் உங்கள் சிந்தனையில் மாற்றம் இருக்கும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
இந்த வாரம் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பல்வேறு திட்டங்கள் நிறைவேறும். நெருங்கிய உறவினர்களுடன் நல்லுறவைப் பேண உங்களின் ஒத்துழைப்பு அவசியம். பழைய எதிர்மறையான விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள். இனிமேல், மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கை செல்லும். இந்த நேரத்தில் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
இந்த வாரம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடப்படும். இது உங்கள் உறவை மேலும் மகிழ்ச்சியாக மாற்றும். வீட்டில் பண்டிகை நாட்களில் மகிழ்ச்சி நிலவும். இந்த வாரம் ஆபத்தான செயல்களில் முதலீடு செய்ய வேண்டாம். பொருளாதார நிலை மோசமடையலாம். கடந்த காலத்தின் எதிர்மறையான விஷயங்கள் நிகழ்காலத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். சளி, காய்ச்சல் போன்றவை எரிச்சலை உண்டாக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
இந்த வாரம் குடும்பச் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் பிரச்சனையை தீர்ப்பதில் உங்களுக்கு நல்ல பங்களிப்பு இருக்கும். சில சோகமான செய்திகள் மூலம் மனம் விரக்தி அடையும். ஆன்மிகப் பணிகளில் சிறிது நேரம் செலவிடுவது நிம்மதியைத் தரும். இளைஞர்கள் தங்கள் தொழில் தொடர்பான திட்டத்தில் தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே, கவனமுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
சிம்மம்:
கடந்த சில தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் பணிகளை சிறப்பாக செயல்படுத்த தன்னம்பிக்கையுடன் முயற்சிப்பீர்கள். நண்பர்களுடன் அதிகம் நெருங்கி பழகாதீர்கள். உங்கள் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள். எதிலும், அலட்சியம் வேண்டாம். வேலை மற்றும் தொழில் சிறப்பாக இருக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கன்னி:
இந்த வாரம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பிடிக்காத காரியங்கள், மனதில் பயம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். நண்பர்களுடன் எந்த விதமான ஒத்துழைப்பையும் எதிர்பார்க்காதீர்கள். இந்த நேரம் பணியாளர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். தற்போதைய கடினமான சூழலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
துலாம்:
இந்த நேரத்தில் நீங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். மற்றவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் எண்ணங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது நீங்கள் பிறருடன் தகராறில் ஈடுபடலாம். அதனை அதிகம் யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள். குடும்ப சூழ்நிலை நிம்மதியாக இருக்கும். மூட்டு வலி மற்றும் வாயு பிரச்சனை அதிகரிக்கலாம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:-
இந்த வாரம் உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். நெருங்கிய உறவினர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் குறித்த செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் உணர்ச்சிவசப்பட்டு அதிகம் பொறுப்பேற்காதீர்கள். நேரமின்மையால் உங்களால் சமாளிக்க முடியாது. இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். காதல் வாழ்கை மிகவும் சிறப்பாக இருக்கும். செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
தனுசு: -
நீங்கள் தொழிலில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் தொழில் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவருடன் தகராறில் ஈடுபடுவது உங்களை காயப்படுத்தும். வீட்டு மூத்த உறுப்பினர்களை மதித்து அவர்களின்வழிகாட்டுதலின் படி செயல்படுங்கள். உங்கள் வீடு மற்றும் குடும்பத்தில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை.
rasi palan
மகரம்:-
உங்களின் ஆளுமை காரணமாக சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க இதுவே சரியான நேரம். இந்த நேரத்தில் நெருங்கிய உறவினரிடம் இருந்து சோகமான செய்திகள் வருவதால் சற்று மன உளைச்சல் ஏற்படும். இந்த நேரத்தில்நீங்கள் உங்கள் குடும்பத்தினரை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. வீட்டில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கவலை தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
rasi palan
கும்பம்: -
நெருங்கிய உறவினரின் பிரச்சனையை தீர்ப்பதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியம். குழந்தை விஷயத்தில் கவனம் அவசியம். இந்த நேரத்தில் யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், இது உங்கள் நிதி நிலைமையை மோசமாக்கலாம். கணவன் மனைவிக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும். அதிக மன அழுத்தம் இருக்க வேண்டாம். ஏனெனில், அதன் பாதிப்பு இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரிக்கும்.
rasi palan
மீனம்:
இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நேர்மறை மற்றும் சீரான சிந்தனை மூலம் உங்கள் முக்கியமான பணிகளை திட்டமிட்ட முறையில் நிறைவேற்றும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சில நேரங்களில் சோம்பல் உங்கள் செயல்களைத் தவிர்க்க முயற்சி செய்யும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு அவசியம்.