கோலி - அனுஷ்காவின் புதிய பேமிலி ஸ்பாட் இதுதான்! வைரலாகும் அலிபாக் பங்களா!
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் ஆடம்பரமான அலிபாக் பங்களா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் இந்த விடுமுறை இல்லத்தில் சில நாள்கள் தங்கிவிட்டு, மீண்டும் மும்பை திரும்பியுள்ளார்.
Virat Kohli Anushka Sharma Holiday Home in Alibaug
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் ஆடம்பரமான அலிபாக் பங்களா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் இந்த விடுமுறை இல்லத்தில் சில நாள்கள் தங்கிவிட்டு, மீண்டும் மும்பை திரும்பியுள்ளார்.
Virat Kohli Holiday Home in Alibaug
புகழ்பெற்ற SAOTA (Stefan Antoni Olmesdahl Truen Architects) வடிவமைத்த இந்த விடுமுறை இல்லம், 2022 இல் ரூ.19 கோடிக்கு கையகப்படுத்தப்பட்ட 8 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த வில்லா 10,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
Kohli Anushka Holiday Home
பங்களாவில் நீச்சல் குளம், ஜக்குஸி, நான்கு குளியலறைகள், ஒரு பெஸ்போக் சமையலறை, விசாலமான தோட்டம், பணியாளர்கள் குடியிருப்பு. மூடப்பட்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன. உட்புறங்கள் இத்தாலிய பளிங்கு கற்கள் மற்றும் துருக்கிய சுண்ணாம்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.
Virat Kohli Alibaug Bunglow
இன்ஸ்டன்ட் பாலிவுட் பகிர்ந்த வீடியோவில், வீட்டின் பூஜைக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பங்களாவின் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் விராட் - அனுஷ்கா இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Virat Kohli, Anushka Sharma Bunglow
விராட் முன்பு ஜூலை 2024 இல் இந்த பங்களா பற்றிப் பகிர்ந்துகொண்டார். பங்களாவின் உட்புற வடிவமைப்பு, இயற்கையை காட்சிகள் போன்றவை பற்றிப் பேசினார். பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வு எடுக்க இந்த இடத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
Virat Kohli, Anushka Sharma in Alibaug
விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் மும்பை குடியிருப்பு 7,171 சதுர அடி பரப்பில் உள்ளது. ரூ. 34 கோடி மதிப்புடையது. குருகிராமிலும் கோலி ரூ.80 கோடி மதிப்புள்ள பங்களா வைத்திருக்கிறார்.