- Home
- Lifestyle
- Valentine's Day 2024 : இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை!! மீறினால் சிறை தண்டனை..
Valentine's Day 2024 : இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை!! மீறினால் சிறை தண்டனை..
காதலர் தினம் பிப்பிரவரி 14ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், இந்த 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மீறினால் சட்டச் சிக்கலில் சிக்கக்கூடும்.

காதலர் தினத்தன்று, காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், உலகம் முழுவதும் இந்த 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மீறினால் சட்டச் சிக்கலில் சிக்கக்கூடும்.
மலேசியா: மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் கூட காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்களாம். மேலும், இது இளைஞர்களிடம் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
ஈரான்: ஈரானில் 2010ம் ஆண்டு முதல் காதலர் தினத்தை கொண்டாட தடை உள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக கருதுகிறது. காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பது ஈரானிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலர் தினம் 2024 : இந்த 4 ராசிக்கு காதலர் தினத்தன்று காதல் துணை அமையும்!!
பாகிஸ்தான்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் காதலர் தினத்திற்கு எதிராக உள்ளது. அங்குள்ள நீதிமன்றம் இஸ்லாமியக் கல்விக்கு எதிரானதாகக் கருதுகிறது. காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை.
இதையும் படிங்க: Valentines Day 2024 : காதலர் தினத்தை சிறப்பாக இருக்க.. உங்கள் ராசிக்கு ஏற்ப இந்த நிறங்களில் ஆடை அணியுங்கள்!
உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் 2012க்குப் பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டது. இங்குள்ள மக்கள் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14 அன்று கொண்டாடுகிறார்கள். உஸ்பெகிஸ்தான் மக்கள் பாபரை தங்கள் ஹீரோவாகக் கருதுகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.