வீட்டில் கேஸ் கீசர் இருக்கா? இந்த விஷயத்துல அலட்சியமா இருந்தா பெரிய ஆபத்து!
வீட்டில் கேஸ் கீசரை பயன்படுத்தினால், அலட்சியமாக பயன்படுத்தக்கூடாது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் பெரிய விபத்து ஏற்படலாம்.
Gas Geysers
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் வானிலை மாற்றத்தால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தக் குளிரினால் மக்கள் குளிப்பதற்கு வெந்நீரை கீசர் வாங்குவது அதிகரித்துள்ளது.
Gas Geysers Safety
குளிப்பதற்கு கேஸ் கீசர்களை பயன்படுத்துவது அடிக்கடி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது. இது சில நேரங்களில் பெரிய விபத்துக்கும் வழிவகுக்கும் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
Gas Geysers Advantage
மின்சார கீசர்களை விட கேஸ் கீசர்கள் உடனடி பயன்பாட்டுக்கு மிகவும் சிறந்தவை. கேஸ் கீசரை ஆன் செய்தவுடன், சூடான தண்ணீர் வர ஆரம்பிக்கும். அதேசமயம் மின்சார கீசரில், தண்ணீர் சூடாவதற்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், கேஸ் கீசர்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை கேஸ் கசிவு. சிலிண்டரை குளியலறையில் வைத்தால் இன்னும் பெரிய ஆபத்து ஏற்படக்கூடும்.
Gas Geysers leakage
இது தவிர, சில சமயங்களில் வெந்நீரில் குளிக்கும்போது ஏற்படும் நீராவியால் கேஸ் கீசரில் தீ அணைந்துவிடும். இதனால் குளியலறையில் எரிவாயு பரவி மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். எனவே, கேஸ் கீசர்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களை குளியலறைக்கு வெளியே வைக்க வேண்டும்.
Branded Gas Geysers
சந்தையில் இரண்டு வகையான கேஸ் கீசர்கள் உள்ளன. ஒன்று உள்ளூர் தயாரிப்புகள். மற்றொன்று பிராண்டட் தயாரிப்புகள். பணத்தை மிச்சப்படுத்த உள்ளூர் கேஸ் கீசரை வாங்கினால், அவை விரைவில் கேஸ் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பிராண்டட் கேஸ் கீசரை வாங்கும்போது, கேஸ் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
Buying Gas Geysers
உள்ளூர் பிராண்ட் கேஸ் கீசரின் விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை இருக்கும். பிராண்டட் கேஸ் கீசர் வாங்க ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். கேஸ் கீசரை வாங்கி பயன்படுத்தலாமா என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவு கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.