துணிகளில் விடாபிடி கறை போக , கரப்பான் பூச்சி தொல்லை நீங்க, வீட்டிற்கு உபயோகமான சின்ன சின்ன சமையல் குறிப்புகள்
Useful kitchen tips: நம்முடைய வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன வீட்டு உபயோக குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால், தேவைப்படும் போது அது நமக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும்.
home cleaning
நம்முடைய வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன வீட்டு உபயோக குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால், தேவைப்படும் போது அது நமக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். அத்தகைய அற்புதமான குறிப்புகளில் வீட்டு மற்றும் சமையல் குறிப்புகளும் அடங்கும். அப்படியாக, இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு 1:
நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கிய துணிமணிகளில் விடாபடியான மஞ்சள் கறை பிடித்து விட்டால் என்ன செய்வது. துணிமணிகளில் இது போன்ற விடாபடியான மஞ்சள் கறை நீக்குவதற்கு கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அதில் தேய்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறவிட்டு நன்கு சோப்பு போட்டு தேய்த்தால் போதும், மஞ்சள் கறை போயே போய்விடும். எப்படியான நாள்பட்ட கறையாய் இருந்தாலும், அரை மணி நேரம் ஊற வைத்து தேய்த்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு 2:
நீங்கள் இனிமேல் சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை தோல் உரிக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். இனிமேல் நீங்கள் அவற்றை சிறிது நேரம் அதை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் உரித்துப் பாருங்கள், சுலபமாக உரிக்கலாம்.
குறிப்பு 3:
இட்லி, தோசைக்கு மாவு அரைப்பவர்கள் அதனுடன் கொஞ்சமாக ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இட்லி, தோசை பஞ்சு போல் வரும். அப்படி இல்லையென்றால், வெண்டைக்காயை மட்டும் சேர்த்து அரைத்து பாருங்கள், இட்லி, தோசை எது சுட்டாலும் கொஞ்சம் கூட காய்ந்து போகாமல், சாஃப்ட் ஆக இருக்கும்.
குறிப்பு 4:
உங்கள் வெள்ளை துணிகள் பளிச்சென்று மின்னுவதற்கு, உப்பு பயன்படுத்தி பாருங்கள். துணி துவைக்கும் போது கொஞ்சம் தூள் உப்பை தண்ணீரில் சேர்த்து துவைத்து விட்டால், உங்கள் வெள்ளை துணி பளீரென மின்னல் போல பளிச்சிடுவதை காண முடியும்.
refrigerator
குறிப்பு 5:
வீட்டில் பூ வாங்கி அதை ஃப்ரிட்ஜில் திறந்த நிலையில் வைத்தால், பூக்களின் வாசம் அனைத்து பொருட்களின் மீதும் வீசும். ஒரு வேளை மூடி வைத்தால் சில நாட்களில் அழுகி விடும். இதற்கு, பதில் நீங்கள் ஜாதிமல்லி வாங்கினால் நீங்கள் என்னதான் ஃப்ரிட்ஜில் போட்டு வைத்தாலும் வாசம் வரவே வராது. மேலும், ஒரு டிஷ்யூ பேப்பரை கொண்டு ஜாதி மல்லியை மெதுவாக ஈரப்பதம் இல்லாமல் கட்டி வைத்தால் அப்படியே வாடாமல் இரண்டு நாட்கள் வரை இருக்கும்.
குறிப்பு 6:
உங்கள் வீட்டில் எறும்பு, ஈ ,கொசு, தொல்லை வராமல் பார்த்து கொள்வதற்கு, வீட்டின் மூலை முடுக்குகளில், வேப்ப இலை, தண்ணீர் தெளித்து விட வேண்டும். இல்லையென்றால் வீடு துடைக்கும் போது, 1 மூடி டெட்டால் ஊற்ற வேண்டும். அதேபோன்று, பாத்ரூமில் கரப்பான்,பல்லி போன்றவற்றை ஒழிக்க பீரோவில் துணிகளுக்கு இடையில் போட்டு வைக்கும் பாச்சா உருண்டை போட்டு விடுங்கள்.