MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ரூ.2.26 லட்சம் கோடி சொத்து: இந்தியாவின் நம்பர் 1 பணக்கார கோவில் எது தெரியுமா? - டாப் 5 பட்டியல்!

ரூ.2.26 லட்சம் கோடி சொத்து: இந்தியாவின் நம்பர் 1 பணக்கார கோவில் எது தெரியுமா? - டாப் 5 பட்டியல்!

இந்தியாவின் டாப் 5 பணக்கார கோவில்களின் பட்டியலில் ஆந்திராவின் திருப்பதி கோவில் சுமார் ரூ.2.26 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் ரூ.1.2 லட்சம் கோடிக்கு அதிகமான சொத்துகளுடன் உள்ளது.

1 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 23 2026, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
1. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் (ஆந்திரப் பிரதேசம்)
Image Credit : Indianeagle

1. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் (ஆந்திரப் பிரதேசம்)

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் காணிக்கைகள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அடிப்படையில் நாட்டின் டாப் 5 பணக்கார கோவில்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு: சுமார் ரூ.2.26 லட்சம் கோடிக்கும் அதிகம். அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் கோடிக்கணக்கான பொதுமக்களின் விருப்பமான வழிபாட்டுத் தலமாக விளங்கும் இக்கோவிலில் தினசரி கோடிக்கணக்கில் காணிக்கைகள் குவிகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
2. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் (கேரளா)
Image Credit : x

2. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் (கேரளா)

இப்பட்டியலில் 2-வது இடத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் உள்ளது.மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு: சுமார் ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகம்.கோவிலின் பாதாள ரகசிய அறைகளில் தங்கம், வைரம், நவரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பழங்கால ஆபரணங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

35
3. ஷீரடி சாய்பாபா கோவில் (மகாராஷ்டிரா)
Image Credit : x

3. ஷீரடி சாய்பாபா கோவில் (மகாராஷ்டிரா)

3-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு: சுமார் ரூ.2,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை. உலகம் முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான சாய்பாபா பக்தர்களின் காணிக்கைகளால் இக்கோவில் பெரும் வருவாயைப் பெறுகிறது.

45
4. குருவாயூர் கோவில் (கேரளா)
Image Credit : x

4. குருவாயூர் கோவில் (கேரளா)

4வது இடத்தில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவில் உள்ளது. மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு: சுமார் ரூ.2,500 கோடிக்கும் அதிகம்.

கேரளாவின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வங்கி வைப்பு நிதிகள் அதிகளவில் உள்ளன.

55
5. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் (ஜம்மு காஷ்மீர்)
Image Credit : x

5. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் (ஜம்மு காஷ்மீர்)

5-வது இடத்தில் ஜம்மு காஷ்மீரில் திரிகூட மலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் உள்ளது. மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு: சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகம். பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் விரும்பிச் செல்லும் முக்கியத் தலமாக இது திகழ்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Perfume Mistakes: பெர்பியூம் வாசனை நீண்ட நேரம் இருக்கணுமா? முதலில் இந்த தவறுகளை நிறுத்துங்க!
Recommended image2
Amazon Sale : ₹5,000 முதல் ₹50,000 வரை சேமிக்கலாம்! அக்டோபர் 8க்கு முன் இந்த 10 பொருட்களை வாங்காதீங்க!
Recommended image3
Cleaning Tips: வீட்டில் தினமும் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? பலரும் செய்யும் தவறுகள்!
Related Stories
Recommended image1
Cleaning Tips: வீட்டில் தினமும் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? பலரும் செய்யும் தவறுகள்!
Recommended image2
Veg Non Veg Symbol: சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் சைவமா, அசைவமா? கண்டுபிடிக்க புதிய ரூல்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved