MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 மர்ம இடங்கள்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நீங்க போக முடியாது.. ஏன்?

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 மர்ம இடங்கள்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நீங்க போக முடியாது.. ஏன்?

Top 5 Forbidden Places in India : இந்தியாவில் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மக்கள் செல்ல முடியாத தடை செய்யப்பட்ட 5 இடங்கள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 09 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 மர்ம இடங்கள்
Image Credit : AI

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 மர்ம இடங்கள்

நமது இந்தியா பல மொழிகள், பல மதங்கள், பல உணவுகள் என பன்முக கலாச்சாரங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. இந்தியா முழுவதும் அழகிய மலைத்தொடர்கள், கடற்கரைகள், பசுமையான வனங்கள் நிறைந்துள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் சுற்றுலா சென்று இயற்கை அழகை ரசித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மக்கள் செல்ல முடியாத தடை செய்யப்பட்ட 5 இடங்கள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

25
வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island)
Image Credit : our own

வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island)

நமது நாட்டின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபரில் வடக்கு சென்டினல் தீவு அமைந்துள்ளது. இங்கு சென்டினலீஸின் என அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சென்டினல் தீவுக்கு இவர்கள் தான் ராஜா. டிவி, செல்போன், மின்சாரம் என வெளியுலகத் தொடர்புகள் ஏதும் இல்லாமல் தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. வெளி மனிதர்களிடம் இருந்து சென்டினல்ஸ்க்கு ஏதும் ஆபத்துகள், நோய்த்தொற்று வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அந்த மக்களை பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசு மற்றவர்களுக்கு தடை விதித்துள்ளது.

இதையும் மீறி சட்டவிரோதமாக சென்டினலுக்கு செல்லும் வெளியாட்களை சென்டினல் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கடந்த 2018ம் ஆண்டு சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான ஜான் சாவ் என்பவர் பிணமாக மீடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்டினல் பழங்குடியினர் அவரை கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Related image1
ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை.. பெண்கள் ஈஸியாக ஓட்ட டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!
Related image2
WhatsApp-ல் பணம் சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு.. உங்கள் வீடியோக்கள் மூலம் இனி காசு மழை.. முழு விவரம்!
35
பாங்கோங் சோ ஏரி (Pangong Tso)
Image Credit : our own

பாங்கோங் சோ ஏரி (Pangong Tso)

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் சோ ஏரி, லே பகுதியில் இருந்து சீன எல்லை வரை நீண்டுள்ளது. இயமலையின் பின்னணியில் ஜில்லென்ற பகுதியில் இந்த ஏரியை காண கண்கோடி வேண்டும். ஆனால் இங்கு செல்ல அனைவருக்கும் அனுமதி கிடையாது. இந்த ஏரியின் சில பகுதிகளில் சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

45
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
Image Credit : google

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையம், மும்பையில் அமைந்துள்ளது. அணுசக்தித் துறையின் (DAE) கீழ் இது செயல்படுகிறது. இங்கு பல்வேறு அணு அலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அணுக்கரு எரிபொருள் சுழற்சி, எதிர்காலத்துக்கு தேவையான நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் என பல்வேறு ஆராய்ச்சி இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான, ரகசிய அணு ஆராய்ச்சி மேற்கொள்ளும் இடம் என்பதால் மக்களுக்கு அனுமதி இல்லை. முன் அனுமதி பெற்ற ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே அனுமதி உண்டு.

55
பாங்கர் கோட்டை (Bhangarh Fort)
Image Credit : Wikipedia

பாங்கர் கோட்டை (Bhangarh Fort)

ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த பாங்கர் கோட்டையில் பகலில் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். ஆனால் இரவில் இங்கு செல்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. அங்கு பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இரவில் உள்லே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்ற கட்டுக்கதைகளும் உலா வருகின்றன.

அக்சாய் சின் (Aksai Chin)

இந்தியாவின் லடாக் எல்லையில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அக்சாய் சின் அமைந்துள்ளது. இது இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாகும். ராணுவ மண்டலம் என்பதால் இங்கு பொதுமக்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் துளிக்கூட அனுமதி இல்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
லக்ஸரி லுக்! மாஸ்டர் பெட்ரூமை அசத்தலா மாத்த 7 மாடர்ன் வால் புட்டி டிசைன்ஸ்!
Recommended image2
Tea Recipe: பால் கம்மியா இருந்தாலும் டீயை கெட்டியா, டேஸ்டா போடலாம்!
Recommended image3
Plant Growth: செடிகள் ராக்கெட் வேகத்தில் வளர இந்த ஒரு மாத்திரை போதும்!
Related Stories
Recommended image1
ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை.. பெண்கள் ஈஸியாக ஓட்ட டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!
Recommended image2
WhatsApp-ல் பணம் சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு.. உங்கள் வீடியோக்கள் மூலம் இனி காசு மழை.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved