- Home
- Lifestyle
- சில்வர் வாட்டர் பாட்டிலில் வீசும் கெட்ட துர்நாற்றம் போக..இந்த ஒரு பொருளை வாட்டர் கேனில் போட்டு வைத்தால் போதும்
சில்வர் வாட்டர் பாட்டிலில் வீசும் கெட்ட துர்நாற்றம் போக..இந்த ஒரு பொருளை வாட்டர் கேனில் போட்டு வைத்தால் போதும்
Silver water bottle cleaning tips: வாட்டர் பாட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க எப்படி சுத்தம் செய்ய வேண்டும், என்ன பொருள் போட்டு வைக்க வேண்டும் என்பதை பற்றிய பயனுள்ள குறிப்பை தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்றைய காலத்தில், எவர்சில்வர் வாட்டர் பாட்டில் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்த எவர்சில்வர் வாட்டர் கேனை நாம் என்னதான் சுத்தம் செய்தாலும், ஒரு விதமான துர்நாற்றம் எப்போதும் வீசி கொண்டே தான் இருக்கும். அதுமட்டுமின்றி, மழைக்காலம் துவங்கி விட்டாலே பாட்டிலை கழுவி வெயிலில் காய வைக்க முடியாது. நாம் என்னதான் ஆரோக்கியமான உணவு முறைகளை சமைத்து சாப்பிட்டாலும், நாம் குடிக்கும் தண்ணீரும், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
எனவே, சில்வர் வாட்டர் கேனை துர்நாற்றம் வராமல் எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றியும், வாட்டர் கேனுக்கு உள்ளே எந்த பொருளை போட்டு வைத்தால், அந்த வாட்டர் பாட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் என்பதை பற்றிய பயனுள்ள குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
எலுமிச்சைப்பழச் சாறு, அரிசி மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து குலுக்கி கொள்ளுங்கள். அதனுடன் விம் லிக்விட் மற்றும் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிரஷ்ஷை இதன் உள்ளே விட்டு நன்றாக தேய்த்து கழுவி கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி, சுத்தம் செய்தால் அதிலிருந்து துர்நாற்றம் நிச்சயமாக வீசாது. உள்ளே இருக்கும் கறைகளும் சுத்தமாக நீங்கிவிடும்.
அப்படி இல்லையெனில், மற்றொரு முறை வினிகரை பாட்டிலில் நிரப்பி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் வினிகர் வாசனை வரும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். அதே நேரம் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, பாட்டில் புதிது போன்று காணப்படும்.
இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள் இன்னும் இருந்தால், மீண்டும் ஒருமுறை இப்படி செய்யுங்கள்.
பிறகு இரண்டு மணி நேரம் வாட்டர் கேனை வெயிலில் ஈரம் போக நன்கு உலர்த்த வேண்டும். இப்படி செய்தால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.