- Home
- Lifestyle
- வீட்டில் உலா வரும், கரப்பான், கொசு போன்ற பூச்சிகளை அடியோடு ஒழிக்க..ஒரே ஒரு மூடி இந்த லிக்விட் ஊற்றினால் போதும்
வீட்டில் உலா வரும், கரப்பான், கொசு போன்ற பூச்சிகளை அடியோடு ஒழிக்க..ஒரே ஒரு மூடி இந்த லிக்விட் ஊற்றினால் போதும்
Home remedies to get rid of creepy crawlies: மழைக்காலத்தில் வீட்டில் உலா வரும், கரப்பான், பல்லி, மண்புழு, கொசு போன்ற பூச்சிகளை முற்றிலும் ஒழிக்க, வீட்டில் இருக்கும் சுலபமான தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மழைக்காலம் துவங்கிவிட்டாலே, வீட்டில் கரப்பான் பூச்சிகள், பல்லி, கொசு போன்றவை வந்து தொல்லை கொடுக்கும். இதனை விரட்டி அடிக்க கடைகளுக்கு சென்று விலை உயர்ந்த கெமிக்கல், ஸ்ப்ரே போன்றவை வாங்கி பயன்படுத்தினாலும், முற்றிலும் ஒழிந்த பாடு இருக்காது. மீண்டும், மீண்டும் வந்து உங்களுக்கு தொல்லை கொடுக்கும்.
அதிலும், தண்ணீர் புழக்கம் அதிகம் இருக்கும், நம்முடைய சமையலறையில் பல்லி தொந்தரவு, கரப்பான் பூச்சி , கொசு போன்ற பூச்சிகளின் தொந்தரவு, அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வதற்கு வீட்டில் இருக்கும் சுலபமான தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கரப்பான் பூச்சிகள்
கரப்பான், பல்லி, கொசு போன்றவற்றை முற்றிலும், ஒழிக்க, வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு காய்ச்சல் மாத்திரையை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும், பூச்சி உருண்டையையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தூள் செய்து வைத்திருக்கும் மாத்திரை, பூச்சி உருண்டை பொடியை முதலில் போடுங்கள்.
அதன் பின்பு ஆப்ப சோடா – 1 டேபிள்ஸ்பூன், கம்ஃபோர்ட் – 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட்டு 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் எல்லா பொருட்களையும் கரைத்து விடுங்கள். நமக்கு தேவையான இந்த லிக்விட் தயார். இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி வைத்து கொண்டால், ஒரு மாதம் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதை உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் பல்லி, கரப்பான், கொசு தொந்தரவு இருக்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து விட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் போல இந்த ஸ்ப்ரேவை தொடர்ந்து அடித்து வர உங்கள் வீட்டு ஜாமான்களில் இடுக்குகளில் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகள் எல்லாம் செத்துப் போய்விடும்.
இரவு தூங்கச் செல்லும்போது ஒரு மூடி அளவு இந்த லிக்விடை சிங்க் ஓட்டை, குளியலறை ஓட்டையில் ஊற்றி விடுங்கள். வாஷ்பேசனிலும் ஊற்றி விடுங்கள். இப்படி செய்தால் இரவு கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வராமல் இருக்கும். சொல்லப்போனால் சமையல் மேடையில் எறும்புகள் வராது. பொடி கொசுக்களும் வராது.
இதனை தவிர்த்து, வேப்ப எண்ணெய் அல்லது பொடியில் கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்த கூறுகள் உள்ளன.. சிறிதளவு வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் பூ பொடியை தண்ணீரில் கலந்து, கரப்பான் பூச்சிகள் உலா வரும் இடத்தில் தெளிக்கவும். இப்படி செய்தால், கரப்பான் பூச்சிகள் முற்றிலும், ஒழியும்.
ஈக்கள்
ஈக்களை விரட்ட யூகலிப்டஸ் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். பருத்தி துணியில் சில துளிகளை ஊற்றி, ஈக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைக்கவும். பிரியாணி இலைகள், கிராம்பு மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை கதவுகள் அல்லது ஜன்னல்களில் கட்டி தொங்க விடுவது ஈக்களை விரட்ட உதவும்.
கொசுக்கள்
முதலில், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் சாமந்தி செடிகளை நட்டு வைக்கவும். ஏனெனில், இந்த பூக்களின் வாசம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. மற்றுமொரு வழிமுறையாக, வீட்டில் இருக்கும் 6-7 துண்டுகள் பூண்டு, கிராம்பு ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்ந்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
பிறகு இந்த லிக்விடை எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து ஊற்றி வைக்கவும். பிறகு இந்த திரவத்தை வீட்டிற்குள் கரப்பான், பல்லி, போன்ற பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். இதன் வாசனை கரப்பான்,பல்லி போன்ற பூச்சிகளை முற்றிலும் வர விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது.