உங்க குழந்தை பொது இடத்தில் அழுகிறதா? கத்துகிறதா? 'இந்த' ட்ரிக் ட்ரை பண்ணுங்க!
Controlling Kids In Public Places : பொது இடங்களில் உங்கள் குழந்தை அழுதாலோ அல்லது கத்தினாலோ அவர்களை சமாளிக்க பெற்றோர்களுக்கான சில எளிய குறிப்புகள் இங்கே.
Controlling Kids In Public Places In Tamil
ஒரு குழந்தையை பெற்றெடுப்பது எவ்வளவு கடினமோ அதை விட அவர்களை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். மேலும் ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், அழுவார்கள் கத்துவார்கள் மற்றும் அடம் பிடிப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை கையாளுவது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் ஆகும். இதற்கு முக்கியமானது பொறுமை மற்றும் திறன்.
Controlling Kids In Public Places In Tamil
அந்த வகையில் உங்கள் குழந்தை பொது இடத்தில் அழும்போது மற்றும் கத்தும்போது அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதற்கு பதிலாக பொறுமையாக இருங்கள். ஒருவேளை நீங்கள் கத்தினால் அதனால் உங்கள் குழந்தை சங்கடமாக உணர்வார்கள். எனவே பெற்றோர்களே உங்களது கோபத்தை இழக்காமல் அந்த சமயத்தில் உங்களது குழந்தையை எப்படி அமைதிப்படுத்த வேண்டும் என்றும் மற்றும் அவர்களை சமாளிப்பது எப்படி என்றும் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!
Controlling Kids In Public Places In Tamil
பொது இடங்களில் அழும் மற்றும் கத்தும் குழந்தைகளை சமாளிக்க டிப்ஸ்:
பொது இடங்களில் குழந்தைகள் அழுதாலோ அல்லது கத்தினாலோ பெற்றோர்கள் தங்களது கோபத்தை இழக்காமல் அமைதியான மனதுடன் அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் அவசியம். அதற்கு பெற்றோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 விஷயங்களை பின்பற்றினால் மட்டும் போதும் அவை.
அமைதியாக இரு
உங்கள் குழந்தை பொது இடங்களில் அழும்போது மற்றும் கத்தும்போது முதலில் நீங்கள் உங்கள் கோபத்தை இழக்காமல் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் அமைதியாக இருக்கும் போது உங்களது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக தனியாக ஆரம்பிக்கும். இதற்கு நீங்கள் சில நிமிடம் மூச்சை உள்ளிழுத்து பிறகு வெளிவிடுங்கள் அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை தலைகீழாக எண்ணுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைங்க தினமும் 'பூண்டு பால்' குடித்தால் மழைகாலத்துல சளி தொந்தரவே இருக்காதாம் தெரியுமா?
Controlling Kids In Public Places In Tamil
காரணத்தை அறிக
குழந்தை அழும்போது அல்லது கத்தும் போது அதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதாவது உங்கள் குழந்தை பசியாக இருக்கிறதா? அல்லது சோர்வாக இருக்கிறதா? எதற்காக அழுகிறது அல்லது கத்திகிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் கண்டறிந்தால் அவர்களை சுலபமாக சமாளிக்க முடியும்.
ஆறுதல்
பொது இடத்தில் உங்கள் குழந்தை அழும்போது அல்லது கத்தும் போதோ அவர்களிடம் கத்துவதற்கு பதிலாக அவர்களை அன்பாக அனைத்து மென்மையாக பேசுங்கள். இதனால் சில நிமிடங்களிலே உங்கள் குழந்தை அமைதியாகிவிடும்.