வீட்டுல மாப் போடும்போது இந்த 3 தவறுகள் செய்யாதீங்க..!
வீட்டை நீங்கள் துடைக்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Tips To Avoid Common Mopping Mistakes : பொதுவாக இல்லத்தரசிகள் தங்களது வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். வீட்டை முறையாக சுத்தம் செய்வதற்கு தூத்து பெரிக்கினால் மட்டும் போதாது. மாப் போடுவதும் மிகவும் முக்கியம். ஏனெனில் வீட்டை தூத்து பெரிக்கினாலும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், தூசிகள், அழுக்குகள் ஆங்காங்கே இருக்கும். அதனால்தான் சில இந்திய வீடுகளில் வீட்டை பெருக்கினாலும் மாப்பு போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒருவேளை துடைக்காவிட்டால் சுத்தம் செய்வது முழுமைடையாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
Common Mopping Mistakes
வீட்டை பெருக்கின பிறகு துடைக்கும் போது அவசர அவசரமாக வேலையை செய்து முடித்து விட வேண்டும் என்று நோக்கில் துடைப்போம். இந்த செயல்பாட்டால் நம்மளை நாம் அறியாமலே சில தவறுகளை செய்து விடுகிறோம். இதன் விளைவாக வீட்டின் தரை சேதமடையக் கூடும். எனவே இந்த பதிவில் அந்த தவறுகள் என்னென்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீடு துடைக்கும் தண்ணீரில் இத கலந்து பாருங்க.. வீட்டின் தரை மின்னும்!
Common Mopping Mistakes
தரையைப் பெருக்காமல் துடைப்பது:
பல சமயங்களில் வீட்டை துடைத்தால் மட்டும் போதும் என்று நினைத்து பலர் தரையை பெருக்காமலயே மாப்பு போட்டு விடுவார்கள். ஆனால் இப்படி செய்வது சரியல்ல. பெருக்காமல் தரையை சுத்தம் செய்வது சரியான சுத்தம் அல்ல. நீங்கள் மாப்பு மட்டும் போடும்போது தரையில் இருக்கும் தூசி, அழுக்குகள் சில சமயங்களில் மாப் மீது ஒட்டிக் கொள்ளும். முக்கியமாக இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தரையில் இருக்கும் அழுக்கு துகள்களால் தரை சேதமடையக் கூடும். குறிப்பாக, மரம் மற்றும் லேமினேட் தரைகளில் இதன் விளைவு தெரியும். எனவே தரையை மாப்போடும் முன் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: தண்ணீயே இல்லாம வீட்டு தரையை '10' நிமிடத்தில் சுத்தம் பண்ணலாம்.. எப்படினு தெரியுமா?
Common Mopping Mistakes
மாப்பை சுத்தம் செய்யாமல் இருப்பது:
பல சமயங்களில் பலர் மாப்பை சரியாக சுத்தம் செய்வதில்லை. எப்போதுமே அழுக்கு மாப் கொண்டு தான் தரையை சுத்தம் செய்கிறார்கள். இதனால் தரையை சரியாக சுத்தம் செய்யாமல் போவது மட்டுமல்லாமல், மாப் துணியில் சிக்கி உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வீட்டிற்குள் பரவி ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். எனவே நீங்கள் எப்போதும் தரைக்கு மாப் போடுவதற்கு முன் முதலில் மாப்பை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள். இது தவிர, நீங்கள் தரையை துடைத்த பிறகும் மாப்பை நன்கு சுத்தம் செய்து காய வைக்க வேண்டும்.
Common Mopping Mistakes
அதிக தண்ணீர் பயன்படுத்தாதீர்:
சிலர் மாப் போடும் போது தேவைக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துவது தரைக்குதான் நல்லதல்ல. தரையை ஈரமாக துடைத்தால் தரையில் உள்ள தூசி மற்றும் அழுக்கு சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதுதவிர மரத்தாலான அல்லது லேமினேட் செய்யப்பட்ட தரையில் அதிக ஈரம் பயன்படுத்தினால் தரை சேதமடைய வாய்ப்பு அதிகரிக்கும்.