அழுக்கு ஸ்விட்ச் போர்டு.. 1 பைசா செலவில்லாமல் சுத்தம் செய்ய டிப்ஸ்!!
உங்கள் வீட்டில் இருக்கும் சுவிட்ச் போர்டுகளை எந்தவித பணமும் செலவழிக்காமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Switchboard Cleaning Tips
நம் வீட்டில் இருக்கும் ஃபேன், லைட் போன்றவற்றை ஆன் நாம் சுவிட்ச் போர்டு பயன்படுத்துவோம். இதனால் அவை சீக்கிரமாகவே அழுக்காகிறது. மேலும் அவற்றில் பாக்டீரியாக்களும் நிறைய வளரும். ஸ்விட்ச் போர்டு மின்சாரம் சம்பந்தப்பட்டது என்பதால், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுத்தம் செய்வது ஆபத்து. ஆகவே பலரும் அதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர்.
ஸ்விட்ச் போர்டுகளை சுத்தம் செய்வது எப்படி?
ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் சுவிட்ச்போர்டை ஆபத்து ஏதும் ஏற்படாமல் சுத்தம் செய்து விடலாம். ஆம், நீங்கள் ஸ்விட்ச் போர்டை சுத்தம் செய்வதற்கும் முன்பு முதலில் வீட்டின் மெயின் பவரை அணைத்து விட வேண்டும். மேலும் சுத்தம் செய்த பின் சுமார் 40 நிமிடங்கள் கழித்து தான் மெயின் பவரை இயக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்விட்ச் போர்டுகளை சுத்தம் செய்வதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அவற்றை சுலபமாக சுத்தம் செய்யும் விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா சிறந்த துப்புரவு பொருளாகும். ஸ்விட்ச் போர்டு சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலந்து தடிமனான பேஸ்ட் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு பிரஷ் உதவியுடன் ஸ்விட்ச் போர்டில் தடவி, நன்கு காய்ந்த பிறகு துடைக்க வேண்டும். இப்போது உங்களது ஸ்விட்ச் போர்டு புத்தம் புதியது போல இருக்கும். உங்கள் வீட்டில் பேக்கிங் சோடா இல்லை என்றால் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தலாம்.
டூத் பேஸ்ட் :
டூத் பேஸ்டில் இருக்கும் பிளீச்சிங் பண்புகள் ஸ்விட்ச் போர்டை சுத்தம் செய்ய பெரிதும் உதவும். இதற்கு ஸ்விட்ச் போர்டில் டூத் பேஸ்ட்டை தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து துடைக்க வேண்டும். இப்போது உங்களது ஸ்விட்ச் போர்டு புதியது போல ஜொலிக்கும். டூத் பேஸ்ட் பதிலாக ஷேவிங் கிரீம் கூட பயன்படுத்தலாம்.
சோப்பு :
ஸ்விட்ச் போர்டை சுத்தம் செய்ய சோப் பயன்படுத்தலாம். இதற்கு மைக்ரோ பேப்பர் துணியில் சோப் நீரை ஊற்றி ஸ்விட்ச் போர்டை துடைக்க வேண்டும். சோப்புக்கு பதில் வினிகர் கூட பயன்படுத்தலாம்.
நெயில் பாலிஷ் ரிமுவர் :
நெயில் பாலிஷ் ரூமவர் எல்லா விதமான கறைகளையும் சுத்தம் செய்ய உதவுகிறது. இதற்கு பருத்தி துணியை பந்து போலாக்கி அதை நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து பிறகு ஸ்விட்ச் போர்டை சுத்தம் செய்ய வேண்டும். இது ஸ்விட்ச் போர்டில் இருக்கும் அழுக்குகளை முற்றிலும் நீங்கி, புதுசு போல ஜொலிக்க வைக்கும்.
தக்காளி சாஸ்:
தக்காளி சாஸிலும் கறைகளை நீக்கக்கூடிய பண்புகள் உள்ளன. சுத்தம் செய்ய தக்காளி சாஸை அதில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து லேசான ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது உங்களது ஸ்விட்ச் போர்டு பளபளக்கும்.