MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge: பிரிட்ஜின் மேல் இந்த பொருட்களை வைக்காதீங்க! பிரச்சனை வந்துடும்!

Fridge: பிரிட்ஜின் மேல் இந்த பொருட்களை வைக்காதீங்க! பிரச்சனை வந்துடும்!

Things on Fridge Top: பிரிட்ஜின் மேல் பொருட்களை வைப்பது வழக்கம். அப்படி பிரிட்ஜின் மேல் பொருட்களை வைப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? எந்தெந்த பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பதை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 30 2026, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிரிட்ஜின் மேல் பொருட்களை வைக்கலாமா?
Image Credit : pinterest

பிரிட்ஜின் மேல் பொருட்களை வைக்கலாமா?

நம் வீட்டில் பொருட்களை வைக்க எவ்வளவு இடம் இருந்தாலும், ஈஸியாக எடுக்கலாம் என்பதற்காக பலரும் பிரிட்ஜின் மேல் பொருட்களை அடுக்கி வைப்பது வழக்கம். வீட்டில் இருக்கும் பிரிட்ஜை இப்போது பார்த்தாலும், பொம்மை, பழங்கள், பர்ஸ், மாத்திரைகள், பவுடர் டப்பா, வாட்டர் பாட்டில் என பல பொருட்கள் அதன் மேல் இருக்கும். பார்ப்பதற்கு இது சாதாரணமான விஷயமாகத் தெரிந்தாலும், இந்தப் பழக்கம் நாளடைவில் சில ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

பிரிட்ஜுக்குள் எந்தப் பொருட்களை வைக்கக் கூடாது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பிரிட்ஜின் மேலேயும் சில பொருட்கள் வைக்கக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி பிரிட்ஜின் மேல் பொருட்களை வைப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? எந்தெந்த பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிரிட்ஜின் மேல் இந்த பொருட்களை வைக்காதீங்க
Image Credit : pinterest

பிரிட்ஜின் மேல் இந்த பொருட்களை வைக்காதீங்க

பிரிட்ஜ் என்பது வெப்பத்தை வெளியேற்றி, உள்ளே இருக்கும் உணவுப் பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் சாதனம். சில பிரிட்ஜிகளின் மேற்பகுதி இயங்கும்போது சூடாக இருக்கும். அதன் மேல் பொருட்களை வைத்தால், பிரிட்ஜுக்குள் உருவாகும் வெப்பம் சரியாக வெளியேறாமல், குளிர்ச்சியை பராமரிக்க கூடுதல் நேரம் இயங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

மருந்து, மாத்திரைகள்: மாத்திரைகளை அறை வெப்பநிலையில் (Room temperature) மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் மேல் வைத்தால், அதிலிருந்து வெளியேறும் வெப்பம் மருந்துகளின் தரம் மற்றும் செயல்திறனை பாதிக்கும். எனவே, மருந்துகளை பிரிட்ஜின் மேல் வைப்பது நல்ல பழக்கம் அல்ல.

Related Articles

Related image1
Fridge: ஃப்ரிட்ஜ் அதிகமாக கரண்ட் இழுக்குதா? இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க!
Related image2
Fridge Cooling Problem: ஃப்ரிட்ஜ் கூலிங் குறையுதா? இந்த சின்ன தப்புதான் காரணம் – உடனே சரி பண்ணுங்க!
34
கெமிக்கல் பொருட்களை பிரிட்ஜிக்கு மேல் வைக்காதீங்க
Image Credit : pinterest

கெமிக்கல் பொருட்களை பிரிட்ஜிக்கு மேல் வைக்காதீங்க

பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு பொருள்களை நீண்ட நேரம் பிரிட்ஜின் மேல் குவித்து வைக்க வேண்டாம். ஏனெனில், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தால் பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகும் நிலை ஏற்படும்.

முக்கியமாக, வீட்டை சுத்தம் செய்ய பயன்படும் லிக்விட், பிளீச்சிங் பவுடர், சானிடைசர் (Sanitizer) மற்றும் பினாயில் (Phenyl) போன்ற கெமிக்கல் பொருட்களை பிரிட்ஜிக்கு மேல் வைத்தால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், மின்னணு சாதனங்கள், காகிதங்கள், எண்ணெய் பாட்டில்கள், அதிக எடை கொண்ட பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டிஷ்யூ பேப்பர்கள், தீப்பெட்டி ஆகியவற்றையும் பிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாது.

பிரிட்ஜின் கம்ப்ரஸர் அதிக நேரம் வேலை செய்யும்போது அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கும். அந்த நேரத்தில் பிரிட்ஜ் மேல் இருக்கும் காகிதம் மிக எளிதாக தீப்பற்ற தீ விபத்தை உண்டாக்கலாம்.

44
ஆய்வுகள் கூறுவது என்ன?
Image Credit : pinterest

ஆய்வுகள் கூறுவது என்ன?

இதுகுறித்து, கடந்த 2023 வெளியான, Sustainable Energy Technologies and Assessments என்ற சர்வதேச அறிவியல் ஆய்வின்படி, பிரிட்ஜை சுற்றி காற்று சுழற்சி இருப்பது அதன் ஆற்றல் திறனுக்கும், குளிரூட்டும் செயல்திறனுக்கும் மிக மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளது

அப்படியானால், பிரிட்ஜின் மேல் எதுவுமே வைக்கக் கூடாதா? என்றால் அது உங்கள் பிரிட்ஜ் மாடலைப் பொறுத்தது. ஆனால், காற்றோட்டம் தடைபடும் அளவுக்கு பிரிட்ஜின் மேல் அதிக பொருள்களை வைத்தால், கம்ப்ரசர் அதிக நேரம் இயங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் மின்சார பயன்பாடு அதிகரிப்பதுடன், குளிரூட்டும் திறனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கண்ணைப் பறிக்கும் அட்டிகை டிசைன்கள்.. லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்!
Recommended image2
Gardening Tips: துளசி முதல் கறிவேப்பிலை வரை... வீட்டில் ஈஸியா வளர்க்க 5 மூலிகைச் செடிகள்!
Recommended image3
Tile Cleaning: டைல்ஸில் படிந்த மஞ்சள் கறையா? இந்த 5 வீட்டு வைத்தியம் போதும்!
Related Stories
Recommended image1
Fridge: ஃப்ரிட்ஜ் அதிகமாக கரண்ட் இழுக்குதா? இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க!
Recommended image2
Fridge Cooling Problem: ஃப்ரிட்ஜ் கூலிங் குறையுதா? இந்த சின்ன தப்புதான் காரணம் – உடனே சரி பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved