விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?
Lord Ganesh Blessings: இந்த நாளில் கணபதி, தனக்கு பிடித்த குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி தருகிறார்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Venus Transit
இந்து மதத்தின் படி, தெய்வங்களில் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.. எந்த விதமான சுப காரியங்கள் துவங்குவதற்கு முன்பும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு வழிபடுவது காரியங்கள் கை கூடும். அப்படியாக, வினை தீர்க்கும் கணபதியை, குறிப்பாக விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளில் வழிபடுவது கூடுதல் சிறப்பாக இருக்கும். ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன் கிரகம், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது. இந்த நாளில் கணபதி, தனக்கு பிடித்த குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி தருகிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sun and Venus Transit
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு எப்போதும் சிறப்பு அருள் நிலைத்திருக்கும். விநாயகப் பெருமானின் சிறப்பு அருளால் இந்த ராசிக்காரர்களின் அனைத்து வேலைகளும் விரைவில் முடிந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சிவனின் மகனான விநாயகப் பெருமான், இந்த ராசிக்காரர்கள் மீது அதிக கருணை கொண்டவர்.
Sun and Venus Transit
மிதுனம்:
புதன் கிரகம் மிதுன ராசியின் சொந்தக்காரர் ஆவார். ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், கணிதம், தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் மீது விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். எனவே, இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக உற்சாகமாக இருப்பது நல்லது.
Sun and Venus Transit
மகரம்:
விநாயகருக்கும், சனி தேவருக்கும் பிடித்தமான ராசி மகரம் ஆகும். எனவே, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் உண்டு. மகர ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் மிகுந்த புத்திசாலி தினம் கொண்டவர்கள்.வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.