Sani peyarchi: இன்னும் 14 நாட்களில் நிகழும் சனி பெயர்ச்சி..மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் ராசிகள் இவைகள்தான்..!
Sani peyarchi 2022 in tamil: மகர ராசியில், சனி பெயர்ச்சி நிகழ்வது குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
shani rashi parivartan 2022
ஜோதிடத்தின் பார்வையில், நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி தேவன், ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதாக ஐதீகம். அதன்படி, சனி பகவான் நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு நல்ல பலன்களும், தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையும் கொடுப்பார்.
அதன்படி, 23ம் தேதி அக்டோபர் 2022 ஆம் ஆண்டு மகர ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறும். இதனால், ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சனியின் உக்கிர பார்வை காரணமாக, மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சில ராசிகளுக்கு சனி பகவான் வேண்டிய வரத்தை அள்ளி தருபவராக இருக்கிறார். அவைகள் எந்ததெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
shani rashi parivartan 2022
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் தொழிலில் பலமான அனுகூலத்தைத் தரும். வியாபாரிகள் புதிய வேலையைத் தொடங்கலாம், இது அவர்களுக்கு பல வித நன்மைகளைத் தரும்.வருமானத்துக்கான பல வழிகள் பிறக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். உங்கள் பணி சிறப்பாக இருக்கும், இது உங்களுக்கு பாராட்டுகளைத் தரும்.
shani rashi parivartan 2022
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும் வீரமும் அதிகரிக்கும். உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும்.
shani rashi parivartan 2022
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அவர்களது வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும். உங்களுக்கு பண ஆதாயத்தால் கௌரவம் உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.