- Home
- Lifestyle
- Rahu Peyarchi: குருவுடன், ராகு கூட்டணி..இந்த நாளில் விபரீத யோகத்தால், தீராத பிரச்சனையை சந்திக்கும் ராசிகள்..!
Rahu Peyarchi: குருவுடன், ராகு கூட்டணி..இந்த நாளில் விபரீத யோகத்தால், தீராத பிரச்சனையை சந்திக்கும் ராசிகள்..!
Rahu Ketu Peyarchi 2022: குருவும், ராகுவும் இணைந்து ஒரே ராசியில் பயணிக்கும் போது, விபரீத யோகம் உண்டாகிறது. இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் அளவிற்கு பிரச்சனைகள் வந்து சேரும்.

ஜோதிடத்தில், குருவும், ராகுவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகிறது. வியாழன் அல்லது குரு பகவான் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல தொழில் ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார். அதேபோன்று, கிரங்களில் மெதுவாக நகரும் ராகுவும் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி கொள்கிறது. இந்த நிலையில், குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் பயணிக்க இருக்கிறது.
இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும். ஜாதகத்தில் ராகுவை விட, வியாழனின் நிலை வலுவாக இருந்தால், இந்த யோகம் பலவீனமாக இருக்கும். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ASTROLOGY
துலாம்:
ஜாதகத்தின் முதல் வீட்டில் வியாழனும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருப்பதால், துலாம் ராசியினர் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனினும், உங்கள் பொறுமையை கடைபிடித்து, உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. உங்களுக்கு சொத்து இழப்பு ஏற்படலாம்.
சிம்மம்:
ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் குரு சண்டாள யோகம் இருப்பதால், சிம்மம் ராசியினர் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இப்போது தொழிலில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் உஙக்ளுக்கு பிரச்சனையாக இருக்கும். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வதால் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.
மகரம்:
ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் குருவும், ராகுவும் சந்திப்பதால், மகர ராசிக்காரர்கள் குடும்பத்தில் சில சண்டைகளையும் சச்சரவுகளையும் சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே புரிதலில் பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சண்டை,சச்சரவுகள் ஏற்படும்.