Sukran Peyarchi 2022: சுக்கிரனின் ராசி மாற்றம்...ஆகஸ்ட் 7 வரை படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...
Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரனின் ராசி மாற்றம் சிலரது வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்கும், சிலருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும் அப்படி யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
sukran peyarchi 2022
சுக்கிரன் பிரவேசம் 2022
ஜோதிடத்தின் படி, கிரங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும், கிரங்களின் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும், செல்வம், நல்ல அதிர்ஷ்டம், மகிமை மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி சுக்கிரனின் நேற்று காலை சரியாக10.50 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை சுக்கிரன் இந்த ராசியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் ஆரம்பமாகும்.எனவே, உஷாராக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
sukran peyarchi 2022
கடகம்:
கடகத்தில் சுக்கிரன் 12 ஆம் வீட்டில் நுழைகிறது. இது உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அவசியம். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.
sukran peyarchi 2022
மீனம்:
மீன ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறது. கடன் வாங்கும் வாய்ப்பு உண்டு.கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நஷ்ட்டம் ஏற்படும். பெரியோர்களை மதித்து செயல்படுவது நல்லது.
sukran peyarchi 2022
கும்பம்:
சுக்கிரன் கும்ப ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இந்த நேரத்தில், குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வேலையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.வாழ்வில் தொய்வு ஏற்படும் . மனதில் கவலை பிறக்கும். நீண்ட நாள் காரியம் தடைபடும்.