வெயில் காலத்தில் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிடாதீங்க.. உடலில் வெப்பம் அதிகரிக்கும்!
கோடை காலத்தில் சில காய்கறிகள் உடலுக்கு நன்மை செய்தாலும், சில காய்கறிகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இவற்றை அதிகமாக உட்கொண்டால் அஜீரணம், தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இவற்றை அளவோடு சாப்பிடுவது அவசியம்.
உடல் வெப்பம் அதிகரிக்கும் காய்கறிகள்
கோடை காலத்தில் உடல் குளிர்ச்சியாகவும் நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பலர் அதற்காக குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா கோடை காய்கறிகளும் ஒரே மாதிரி இல்லை. சில காய்கறிகள் உடலுக்கு நல்லதானாலும், அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பத்தை உயர்த்தும் தன்மை கொண்டவை. அதனால், கோடையில் என்ன சாப்பிடுவது என்பதில் கவனம் தேவை.
உடல் வெப்பம் அதிகரிக்கும் உணவுகள்
கோடையில் அதிக வெப்பம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் வெப்பம் மேலும் உயரும். இதனால் அஜீரணம், அசிடிட்டி, ஹார்ட்பர்ன் போன்ற பிரச்சனைகள். சிலருக்கு தோல் பிரச்சனைகள், பொடுகு, பிம்பிள்ஸ் போன்றவையும் தோன்றும். அதனால், வெப்பத்தை அதிகரிக்கும் காய்கறிகளை அளவாக மட்டுமே சாப்பிடுவது நல்லது.
கத்திரிக்காய்
கத்திரிக்காய் கோடை காலத்தில் கிடைக்கும் பொதுவான காய்கறி. ஆனால் இது உடலுக்கு ‘ஹீட்’ தரும் தன்மை கொண்டது. அதிகமாக சாப்பிட்டால் அசிடிட்டி மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை வறுக்காமல், குறைந்த எண்ணெய் மற்றும் மசாலாவுடன் சமைத்து சாப்பிடுவது சிறந்தது.
முருங்கைக்காய்
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகளும் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் இதுவும் உடல் வெப்பத்தை உயர்த்தும் காய்கறிகளில் ஒன்று. சமீபத்தில் இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அதிகமாக பேசப்பட்டதால், பலர் தினசரி உணவில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும், கோடை காலத்தில் இதை அதிகமாக சாப்பிடாமல், அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம்
வெங்காயம் குளிர்ச்சி தரும் உணவாக கருதப்பட்டாலும், அதில் உள்ள காரத்தன்மை அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பம் உயரும். மேலும், அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான மசாலா உணவுகள் கோடையில் தவிர்க்கப்பட வேண்டும். உடல் எளிதாக செரிக்கக்கூடிய, குறைந்த மசாலா, குறைந்த எண்ணெய் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால், உடல் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

