மன அழுத்தம் இருக்க இளைஞர்களுக்கு வரும் கொடிய நோய்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
மன அழுத்தம் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விரிவாக்கம்....
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் மேற்கொண்ட புதிய ஆய்வில் மனச்சோர்வை சந்திக்கும் இளைஞர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுமார் 18 முதல் 49 வயதுக்குட்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இளைஞர்களிடையே இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இளைஞர்கள் அதிக மன அழுத்தமாக, கவலையோடு உணரும்போது இதய துடிப்பு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். புகைபிடித்தல், மது அருந்துதல், குறைவான உறக்கம், சோர்வு போன்ற மோசமான வாழ்க்கை முறை மனச்சோர்வை ஏற்படுத்தும் காரணிகளில் அடங்கும். இது அனைத்தும் உங்கள் இதயத்தை பாதிக்கும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இணை பேராசிரியர் கரிமா ஷர்மா தெரிவிக்கிறார்.
கிட்டத்தட்ட 5 லட்சத்து 93 ஆயிரத்து 616 பேரிடம், 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மன அழுத்தத்தில் பாதிப்படைந்து இதய நோய்க்குள் விழுவது தெரியவந்துள்ளது. பல நாள்கள் மனச்சோர்வை கொண்டிருந்த இளைஞர்கள் மோசமான இதய ஆரோக்கியத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: விந்தணுவால் அலர்ஜி வருமா? இதன் அறிகுறிகள் என்ன? எப்படி கண்டறிய வேண்டும்?
தொடர்ந்து 13 நாட்கள் மன அழுத்தம் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு, மன அழுத்தம் இல்லாத இளைஞர்களுடன் ஒப்பிடும்போது 1.5 மடங்கு அதிகம் உள்ளது. 2 வாரத்திற்கு மேலாக மோசமான மனநலம் உள்ளவர்களின் இதய ஆரோக்கியம் பாதிப்பு இருமடங்காக இருந்தது.
மனச்சோர்வு, இதயநோய் என்பது இணைந்த பாதை. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இதய நோய் உள்ளவர்கள் மனச்சோர்வை அனுபவிக்கிறார்கள். அதனால் மனச்சோர்வை குறைப்பது தான் இதயத்தை பாதுகாக்கும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் ஆய்வின் முதன்மை ஆசிரியர் யா அடோமா க்வாபோங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா சர்க்கரை நோயாளிகள்?